எம்.எச்-370, ஏரியா 51 தொடர்பு..! ஏலியன்ஸ் மர்மத்திற்கும், மாயமான விமானத்திற்கும் ஒற்றுமைகள்: வெளியான திடுக் தகவல்

Report Print Basu in ஏனைய நாடுகள்

ஏரியா 51 மற்றும் அந்த தளத்தை சுற்றியுள்ள மர்மம், மாயமான எம்.எச்.370 விமானத்தை சுற்றியுள்ள மர்மத்தைப் பற்றி நமக்கு நிறைய கற்பிக்கக்கூடும் என்று நிபுணர் ஒருவர் கூறியுள்ளார்.

பைலட் மற்றும் எழுத்தாளர் சில்வியா ரிக்லி, 239 பேருடன் காணாமல் போன எம்.எச்.370-யை சுற்றியுள்ள மர்மம், அமெரிக்க தளத்தை சுற்றியுள்ள மர்மத்துடன் எவ்வாறு ஒத்திருக்கிறது என்பதை விவரித்தார். மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச்.370 மார்ச் 8, 2014 அன்று காணாமல் போனது, மொத்தம் 239 பயணிகள் மற்றும் பணியாளர்கள் இறந்துவிட்டதாக கருதப்படுகிறது.

விமானம் காணாமல் போனது நிச்சயமாக தவறுகள் மற்றும் சதித்திட்டங்களின் கலவையாகும் என சில்வியா கூறியுள்ளார். அமெரிக்காவில் ஏரியா 51 பகுதியில் உளவு விமானங்களின் வளர்ச்சி மற்றும் சோதனைகள் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால், அங்கு அமெரிக்கா என்ன செய்கிறது என்பது யாருக்கும் தெரியாது. அங்கு நடப்பதை மறைக்க அமெரிக்கா தங்களால் முடிந்த அனைத்தையும் செய்தது.

அவர்கள் ஏலியன் கதைகளை ஊக்குவித்தனர், ஏனென்றால் அவர்கள் உண்மையிலேயே என்ன செய்கிறார்கள் என்பதில் இருந்து கவனத்தை திசை திருப்பினர். இந்த அளவிற்கு ஒரு சம்பவத்தை மூடிமறைக்கும் போது ஒரு மர்மத்தைப் புரிந்துகொள்வது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.

ஏரியா 51 நெவாடாவின் தெற்கில் மிகவும் வகைப்படுத்தப்பட்ட அமெரிக்க விமானப்படை தளமாகும். பல ஆண்டுகளாக, அங்கு வேற்றுகிரகவாசிகள் மற்றும் யுஎஃப்ஒக்கள் தொடர்பாக ஏராளமான சதி மற்றும் மர்மங்கள் இருப்பதாக தூண்டி விடப்பட்டுள்ளது.

அதே போல் தான் காணாமல் போன விமானம் குறித்த மலேசியாவின் ஆரம்ப பதில் அச்சமூட்டும் வகையில் இருந்தது என கூறிய சில்விய, ஆரம்ப நாட்களில் தகவல் பற்றாக்குறை இருந்ததால் சந்தேகத்திற்கு இடமின்றி தவறுகளை மறைக்க மலேசியா விரும்பியது. நிறைய சதித்திட்டங்கள் குறிப்பாக தவறுகளை மறைக்கும் ஒரு முயற்சியாக அது இருந்தது.

தவறுகள் பட்டியல் பற்றி கூறிய சில்வியா, அதாவது எம்.எச்.370 விமானம் ஒருபோதும் கண்டுபிடிக்கப்படாது என விவரித்தார், அதே நேரத்தில் தொடர்ச்சியான பிரச்சினைகள் நிகழ்ந்தன, விசாரணை முயற்சிகளுக்கான நம்பிக்கை அழிக்கப்பட்டன. விமானம் காணாமல் போக மற்றொரு காரணம் என்னவென்றால், எம்.எச்.370 விமானத்தில் உள்ள பொழுதுபோக்கு அமைப்பு மூலம் ஹேக் செய்யப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது எனவும் சில்வியா கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்