அரசுக்கு எதிராக போராடிய சிறுவன் முகத்தில் 52 ரப்பர் குண்டுகளை பாய்ச்சிய பொலிஸார்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

வெனிசுலாவில் எரிவாயு பற்றாக்குறைக்கு எதிர்ப்பு போராடிய சிறுவன் முகத்தில் 52 ரப்பர் குண்டுகள் பாய்ந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வெனிசுலாவில் எரிவாயு பற்றாக்குறைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் ரூஃபோ என்கிற சிறுவன் தன்னுடைய சகோதரன் மற்றும் தாய் உடன் சேர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளான்.

அப்போது ரப்பர் குண்டுகளை வைத்து பொலிஸார் நடத்திய தாக்குதலில், ரூஃபோ முகத்தில் மட்டும் 52 குண்டுகள் பாய்ந்து ரத்தம் கொட்டியுள்ளது.

மேலும், ரூஃபோவின் சகோதரன் அட்ரியன் (14) மற்றும் மற்றொரு சிறுமிக்கும் தலைப்பகுதியில் பலத்த காயமடைந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பொலிஸாரின் மீது, கொலை முயற்சி, ஆயுதத்தை முறையற்ற முறையில் பயன்படுத்துதல் போன்ற குற்றசாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இதற்கிடையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரூஃபோ, தன்னுடைய பார்வை திறனை இழந்துள்ளார். 4 நாட்கள் மருத்துவமனையில் இருந்த ரூஃபோ, நோய்த்தொற்று ஏற்படும் அபாயம் இருப்பதால் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு திரும்பியுள்ளார்.

இந்த சம்பவமானது உலகநாடுகள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், பல பகுதிகளில் இருந்தும் மக்கள் உதவ முன்வருகின்றனர்.

இதுகுறித்து பேசிய ரூஃபோ, "நான் என் பார்வையைத் திரும்பப் பெற விரும்புகிறேன். எனக்கு எல்லா வகையான உணர்வுகளும் உள்ளன. நான் இன்னும் அழ விரும்புகிறேன். ஆனால் என்னால் முடியவில்லை. மருத்துவமனையில் போதுமான அளவு அழுதுவிட்டேன்" எனக்கூறியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்