மலேசிய மன்னர் மனைவியை விவாகரத்து செய்யவே இல்லை: புதிய தகவல்கள், வீடியோ மற்றும் படங்கள்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

மலேசிய மன்னர் தனது மொடல் அழகியை விவாகரத்து செய்துவிட்டதாக ஆதாரத்துடன் செய்திகள் வெளியாகியுள்ள நிலையிலும், அவரது வழக்கறிஞர் விவாகரத்து செய்ததற்கான ஆவணங்கள் எதுவும் தங்களுக்கு கொடுக்கப்படவில்லையென்றும், அவர் இன்னும் மன்னரின் மனைவியாகத்தான் இருக்கிறார் என்றும் தெரிவித்துள்ளார்.

விவாகரத்தாகிவிட்டது என்பது வெறும் பேச்சுதான், ஒரு வதந்தி பரப்பும் பத்திரிகை அதை வெளியிட்டுள்ளது, எங்களிடம் அதிகாரப்பூர்வ ஆவணங்களும் இல்லை, எங்களுக்கு அதைக் குறித்து ஒன்றும் தெரியவும் தெரியாது என்றும் ஒக்சானாவின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

அதே நேரத்தில் ஒக்சானாவின் தோழியான Tatyana Andreeva, ஒரு மாற்றுக் கருத்தைக் கூறியுள்ளார்.

அதாவது சென்ற மாதம் (ஜூன் ) 26ஆம் திகதி, ஒக்சானா ரஷ்யாவுக்கு அழகிப் போட்டி ஒன்றில் கலந்து கொள்வதற்காக சென்றதாகவும், அப்போதே அவர் விவாகரத்து பெற்றவராகத்தான் வந்ததாகவும் தெரிவித்துள்ளார் Tatyana.

இதற்கிடையில் ஒக்சானா தற்போது மாஸ்கோவில் ஒரு வீட்டில் தலைமறைவாக தனது குழந்தை மற்றும் தாயுடன் தங்கியிருப்பதாகவும், அவருக்கான செலவுகளை மன்னரே ஏற்றுக் கொள்வதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மன்னர் ஐந்தாம் சுல்தான் முகம்மது (50), ஒச்சானாவை (27) மணந்ததே உலகத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்திய நிலையில், ரியாலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், ஒக்சானா நீச்சல் குளம் ஒன்றில் மற்றொரு நபருடன் பாலுறவு கொள்ளும் புகைப்படங்கள் வெளியாக, தனது பதவியைத் துறந்தார் மன்னர்.

தற்போது ஒக்சானாவை அவர் விவாகரத்தும் செய்துவிட்ட நிலையில், அரண்மனை வட்டாரத்தைச் சேர்ந்தவர் என்று தன்னைக் குறிப்பிடும் ஒருவர், தங்களிடையே உள்ள உறவு குறித்த வீடியோக்களும் விவரங்களும் ரஷ்ய பத்திரிகைகளில் வெளியானதாலேயே மன்னர் ஒக்சானாவைப் பிரிந்ததாக் தெரிவிக்கிறார்.

தங்களது உறவு தொடர்பான விடயங்கள் ரஷ்ய பத்திரிகைகளில் வெளியானதை மன்னர் விரும்பவில்லை என்கிறார் அந்த நபர்.

இந்நிலையில் மீண்டும் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் ஒக்சானா. அந்த வீடியோவில், தான் வாழ்வின் இறுதிவரை மன்னருடன் வாழ விரும்புவதாக ஒக்சானா மனம் நெகிழ்ந்து பேச, கெமரா மன்னர் பக்கம் திரும்புகிறது.

அவரோ, எங்கள் குடும்பத்தைப் பொருத்தவரை முதன்மையான விடயம் குழந்தைகள், அவர்கள்தான் உங்கள் வாரிசு என்று கூறும் அவர், எனக்கு இரண்டு விடயங்கள் முக்கியம், அவை பொறுமையும் புரிந்து கொள்ளுதலும் என்கிறார்.

பலர் எப்போதும் காதல் காதல் என்கிறார்கள், காதல் நல்லதுதான், ஆனால் 15, 20 ஆண்டுகள் கடந்தபின் பொறுமையும் புரிந்து கொள்ளுதலும் காதலை முந்தியிருக்கும் என்கிறார் மன்னர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்