பாப்பாய் மனிதனாக மாறியது எப்படி? ரககியத்தை உடைத்த பாடிபில்டர்: பிச்சை எடுக்கும் அவலம்

Report Print Basu in ஏனைய நாடுகள்

பாப்பாய் என அழைக்கப்படும் ரஷ்யாவை சேர்ந்த பாடிபில்டர் தனது அசாதாரணமான பெரிய கைகளை சரி செய்ய பணத்திற்காக பிச்சை எடுக்கிறார்.

22 வயதான கிரில் டெரெஷின், கார்ட்டூன் கதாபத்திரமான பாப்பாய் போன்று பெரிய கைகளை கொண்டி இருந்தால் உலகம் முழுவதும் பிரபலமானார்.

தற்போது, அவரது கைகளே அவருக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது அசாதாரணமான கையின் ரகசியத்தை உடைத்துள்ளார் கிரில், அதாவது, சின்த் எண்ணெயால் செலுத்தியே கைகளை பெரியதாகியதாக கூறியுள்ளார்.

தற்போது, அந்த எண்ணெய் சில மோசமான பக்க விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது. அவரது கையில் உள்ள சின்த் எண்ணெய் நெக்ரோசிஸை ஏற்படுத்துவதாகவும், அவரது கைகளில் உள்ள செல்கள் இறப்பதாகவும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

தனது கைகளை காப்பாற்ற, கிரில் சிகிச்சைக்காக இங்கிலாந்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து கிரில் கூறியதாவது, இந்த நேரத்தில், என் கைகள் மோசமான நிலையில் உள்ளன, மேலும் அவை சிவந்து கொண்டிருக்கின்றன. சிகிச்சைக்காக ஐரோப்பாவில் உள்ள ஒரு மருத்துவரைப் பார்க்க 37,760 டாலர் செலவாகும். இதற்கான நிதி திரட்டலைத் தொடங்கி உள்ளேன்.

நான் இங்கிலாந்து செல்ல விரும்புகிறேன், ஆனால் மிக முக்கியமான விஷயம் சிகிச்சை வெற்றிகரமாக உள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...