நடுவானில் நேருக்கு நேர் மோதிக்கொண்ட ஹெலிகாப்டர் - விமானம்: அதிர்ச்சியூட்டும் வீடியோ

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

இத்தாலியின் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் நேருக்குநேர் மோதி 9 பேரை பலிகொண்ட விமானத்தின் கடைசி நிமிட வீடிய காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

ஜனவரி மாதம் 25ம் திகதியன்று பிரான்சில் உள்ள மெகீவ் நகரிலிருந்து புறப்பட்ட சுற்றுலா விமானம் மற்றும் இத்தாலிய ஹெலிஸ்கி ஹெலிகாப்டர் ஆல்ப்ஸ் மலைப்பகுதியில் நேருக்குநேர் மோதி விபத்தில் சிக்கின.

இந்த சம்பவம் அறிந்து விரைந்த மீட்புப்படை அதிகாரிகள், சம்பவ இடத்தில் ஐந்து பேர் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தினர், ஆனால் அடுத்த நாள் பனியில் இரண்டு உடல்களைக் கண்டபோது இறந்தவர்களின் எண்ணிக்கை ஏழு ஆக உயர்ந்தது.

இதற்கிடையில் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்ட பிரெஞ்சு நான்கு இருக்கைகள் கொண்ட விமானத்தின் பைலட் மற்றும் ஹெலிகாப்டரில் ஏறிய ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த பிலிப் மைக்கேல் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

பிரான்சில் இருந்து புறப்பட்ட விமானம் உள்ளூர் விமானப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் அனுமதி பெறாமல் நுழைந்ததே விபத்திற்கு காரணம் என பொலிஸ் செய்தித் தொடர்பாளர் தகவல் வெளியிட்டிருந்தார்.

இந்த நிலையில், காட்சிகள் அடங்கிய இரண்டு கோப்ரோ கேமராக்கள் வடமேற்கு இத்தாலியின் ஆஸ்டா பள்ளத்தாக்கிலுள்ள லா துய்லின் ஸ்கை ரிசார்ட்டுக்கு அருகிலுள்ள விபத்துக்குள்ளான இடத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வீடியோ விபத்தின் இரண்டு தனித்தனி காட்சிகளை ஒருங்கிணைக்கிறது - ஒன்று விமானத்திலிருந்து எடுக்கப்பட்டதாகவும் மற்றொன்று ஹெலிகாப்டரின் முன் ஜன்னலிலிருந்தும் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்