பெண்கள் கொல்லப்படுவது இந்த நாட்டில் தான் அதிகம்! ஐநாவின் அதிர வைக்கும் அறிக்கை

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

இந்தியாவில் ஆண்கள் கொல்லப்படும் விகிதம் குறைந்துள்ளதாகவும், ஆனால் பெண்கள் கொல்லப்படும் விகிதம் அதிகரித்து வருவதாகவும் ஐக்கிய நாடுகள் சபை அறிக்கை வெளியிட்டுள்ளது.

தனி நபர் சார்ந்த கொலை (ஹோமோசைட்) குறித்த அறிக்கையை ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையில் இந்தியாவில் பெண்கள் கொல்லப்படும் விகிதம் அதிகமாக உள்ளதாகவும், ஆண்கள் கொல்லப்படும் விகிதம் குறைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையின் படி, உலக அளவில் 2017ஆம் ஆண்டு மட்டும் சுமார் 4,64,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் அரசு அடக்குமுறைகளால் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட 87,000 பேர் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், கடந்த 2000ஆம் ஆண்டு இந்தியாவில் கொல்லப்பட்ட பெண்களின் எண்ணிக்கை 15, 196 ஆக இருந்த நிலையில், 2016ஆம் ஆண்டில் 18, 016 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல் ஆண்களின் எண்ணிக்கை, 2006ஆம் ஆண்டில் 32, 971 ஆக இருந்த நிலையில் 2016ஆம் ஆண்டில் 24, 662 ஆக குறைந்துள்ளது. குறிப்பாக, வரதட்சணைக் கொடுமை காரணமாக பெண்கள் கொல்லப்படும் எண்ணிக்கை, 2006யிலிருந்து 2016ஆம் ஆண்டு வரை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்