ஒரே நாளில் ஏழைகளான உலகின் பெரும் கோடீஸ்வரர்கள்: இழந்த தொகை எவ்வளவு தெரியுமா?

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

உலகின் பெரும் செல்வந்தர்கள் பலரின் தனிப்பட்ட சொத்துமதிப்பில் கடந்த ஓராண்டில் மட்டும் 3 சதவிகித வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முக்கிய காரணியாக பங்குச் சந்தைகளின் எதிர்பாராத வீழ்ச்சி மற்றும் சீனப் பொருளாதாரத்தின் மந்தநிலை என கூறப்படுகிறது.

கடந்த 8 ஆண்டுகளில் இது முதன்முறை என கூறும் பொருளாதார நிபுணர்கள், பலருக்கும் இது பேரிடியாக அமைந்திருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.

பில்கேட்ஸ், ஜெஃப் பிசோஸ், மார்க் சக்கர்பர்க் உள்ளிட்ட முன்னணி செல்வந்தர்கள் பலர் மொத்தமாக சுமார் 2 டிரில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை இழந்திருக்கலாம் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆசிய பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியே முக்கிய காரணம் எனவும் கூறப்படுகிறது. மேலும், சீனா மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு இடையே வர்த்தக உறவில் ஏற்பட்டுள்ள சிக்கலும் ஒரு காரணமாக பார்க்கப்படுகிறது.

ஆனால் மத்திய கிழக்கு நாடுகளை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கோடீஸ்வரர்கள் சிறப்பான ஏற்றத்தை கண்டுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்