கார்ட்டூன் பார்த்துக்கொண்டிருந்த சிறுமியை சுற்றிவளைத்த மலைப்பாம்பு

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

இந்தோனேசியாவில் கார்ட்டூன் பார்த்துக்கொண்டிருக்கும் மூன்று வயது சிறுமியை மலைப்பாம்பு ஒன்று சுற்றிவளைத்தபடி இருக்கும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இதனை பார்க்கும் இணையதளவாசிகள் பலரும், அந்த பாம்புகளால் சிறுமி தாக்கப்படலாம் என அச்சம் தெரிவிக்கின்றனர்.

டிலான் மஹாராணி என்கிற மூன்று வயது சிறுமி தன்னுடைய இரண்டு வயதில் காயமடைந்த ஒரு மலைபாம்பிற்கு சிகிச்சை அளித்தார். அதேபோல ஒரு முதலைக்கு பல் துலக்கிவிட்டார். அந்த சமயத்தில் வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

வீடியோவை காண...

இந்த நிலையில் அதே சிறுமி கார்ட்டூன் பார்த்துக்கொண்டிருக்கும் போது 5 வகையான மலைப்பாம்புகள் அவரை சுற்றிவளைத்தபடி இருக்கும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

தெற்காசியாவில் மிகவும் பிரபலமான 'Upin & Ipin' என்கிற கார்ட்டூனை பார்க்கும் ஆர்வத்தில், மலைப்பாம்பு தன்னை எந்த அளவிற்கு சூழ்ந்துள்ளது என்பதை கூட அந்த சிறுமி கவனிக்காமல் இருக்கிறார்.

அவை விஷமற்றவை என்றாலும் கூட, வேறு எந்த விதத்திலாவது அசம்பாவிதம் ஏற்பட்டுவிடலாம் என இணையதளவாசிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து சிறுமியின் தந்தை கூறுகையில், எனக்கு முதலில் அச்சம் இருந்தது. ஆனால் என் மகள் மீது இருந்த நம்பிக்கையால் தற்போது இல்லை. அவளுக்கு இயற்கையை மிகவும் பிடிக்கும். அவற்றை அதிகம் நேசிக்கிறாள்.

இந்த பாம்புகள் என்னையும், என்னுடைய அம்மாவையும் காயப்படுத்தியிருக்கின்றன. ஆனால் என் மகள் ராணியை ஒருபோதும் அவை காயப்படுத்தியதில்லை.

மற்றவர்கள் என்ன உணர்கிறார்கள் என்பது எனக்குப் புரிகிறது. நான் சில நேரங்களில் பயப்படுகிறேன் என்பது உண்மைதான், ஆனால் மிருகத்துடனான அவளது தொடர்புகளைப் பார்த்தபின், பயப்படும் உணர்வு என்னிடம் இருந்து நீங்கிவிட்டது எனத்தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers