காந்தியை கேவலப்படுத்திய இஸ்ரேல்... மதுபான பாட்டிலில் கூலிங் கிளாஸூடன் தேச பிதா

Report Print Basu in ஏனைய நாடுகள்

இஸ்ரேலை சேர்ந்த மதுபான நிறுவனம் தனது மதுபான பாட்டில் லேபிளில், கூலிங் கிளாஸூடன் இந்திய தேச பிதா காந்தியின் கேலிச்சித்திதை பயன்படுத்தியுள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இஸ்ரேலை தமைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் மல்கா மதுபானம் மற்றும் நெகேவ் பீர்ஸ் நிறுவனங்கள் கூட்டாக இதை உருவாக்கியுள்ளனர்.

இஸ்ரேலின் 71 வது சுதந்திர தினத்தை நினைவுகூரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள மதுபான பெட்டி தொகுப்பில், சர்ச்சைக்குரிய பாட்டில் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த தொகுப்பில் பல்வேறு வகையான பீர் பற்றிய பல்வேறு வரலாற்று புள்ளிவிவரங்கள் இடம்பெற்றுள்ளன. இதில், கலர் சட்டை, கூலிங் கிளாஸூடன் இருக்கும் காந்தியின் கார்ட்டூன் படம் இடம்பெற்றுள்ளது.

இது காந்தியை கேவலப்படுத்தும் செயல் என கேரளாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு மகாத்மா காந்தி தேசிய அறக்கட்டளையின் தலைவர் எபி ஜே ஜோஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், மதுபான நிறுவனம் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கும் படி, இந்திய பிரமர் நரேந்திர மோடி மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஆகியோருக்கு புகார் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்