வடகொரிய ஜனாதிபதியிடம் டிரம்ப் வைத்த முக்கிய கோரிக்கை!

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

அணு ஆயுத ஏவுகணை சோதனையை முற்றிலுமாக நிறுத்துமாறு வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன்னிடம், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், வடகொரியாவிற்கு சென்றுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஒருவர் அம்மண்ணியில் காலடி வைப்பது இதுவே முதல்முறை என்பதால், இரு நாட்டு தலைவர்களுக்கு இடையேயான இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

வடகொரியா-தென்கொரியா எல்லையில் நடந்த இந்த சந்திப்பின்போது, இருநாட்டு தலைவர்களும் ஒருவருக்கொருவர் கைக்குலுக்கிக் கொண்டனர்.

அதன் பின்னர், வடகொரிய ஜனாதிபதியிடம் அணு ஆயுத ஏவுகணை சோதனையை முற்றிலுமாக நிறுத்துமாறு டிரம்ப் வலியுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

அதே போல் கிம் ஜாங் உன்னும், தங்கள் நாட்டின் மீது அமெரிக்கா விதித்துள்ள பொருளாதார தடைகளை நீக்குமாறு டிரம்பிடம் வலியுறுத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, தென் கொரிய ஜனாதிபதி இருநாட்டு தலைவர்களின் இந்த 3வது சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்று குறிப்பிட்டார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்