அவர் கரடியால் தாக்கப்படவில்லை: கரடியால் தாக்கப்பட்டதாக கூறப்பட்ட நபரின் மருத்துவர்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் கரடியால் தாக்கப்பட்டதாக கூறப்படும் நபர் உண்மையில் அவ்வாறு தாக்கப்படவில்லை என்றும், அவருக்கு சோரியாசிஸ் நோய் என்றும், தான்தான் அவருக்கு சிகிச்சையளிப்பதாகவும் மருத்துவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ரஷ்யாவிலுள்ள ஒரு குகையிலிருந்து ஒருவரை கண்டுபிடித்ததாகவும், அவரை கரடி ஒன்று தனது உணவுக்காக சேமித்து வைத்திருந்ததாகவும் செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

தற்போது சில தனியார் ஆராய்ச்சியாளர்கள் அவர் யார் என்ற உண்மையைக் கண்டுபிடித்துள்ளனர்.

அவர்கள், அலெக்சாண்டர் என்னும் அந்த நபருக்கு சிகிச்சை அளித்து வரும், கசகஸ்தானிலுள்ள மருத்துவமனை ஒன்றின் மருத்துவரை தேடிக் கண்டுபிடித்துள்ளனர்.

Aktobe Medical Centre என்னும் அந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவரான Dr Rustam Isaev, அலெக்சாண்டர் தனது கண்காணிப்பில் இருந்த நோயாளிதான் என்பதை உறுதி செய்துள்ளார்.

இந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவர் என்கிற முறையில் நான் கூறுகிறேன், அலெக்சாண்டர் எங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நோயாளி, அவர் ரஷ்யாவைச் சேர்ந்தவர் அல்ல.

அவர் கசகஸ்தானின் Aktobe நகரில் வசிக்கிறார்.

அவருக்கு சோரியாசிஸ், அவர் மருத்துவமனையிலிருந்து விடுவிக்கப்பட்டு வெளி நோயாளியாக சிகிச்சையை தொடர்கிறார்.

அவரது தாயார் அவரை கவனித்துக் கொள்கிறார் என்றார் Dr Rustam Isaev.

நிச்சயம் தனது மருத்துவமனை ஊழியர் யாரோதான் அந்த வீடியோவை வெளியிட்டு இப்படி ஒரு வதந்தியைப் பரப்பியிருக்க வேண்டும் என்று கூறியுள்ள அவர், அந்த ஊழியரைக் கண்டுபிடித்து அவரை வேலையை விட்டு நீக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்