சிறையில் பொலிஸாரை திணற வைத்த இரட்டையர்கள்: சினிமாவை விஞ்சிய சம்பவம்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

துருக்கியில் கொலை குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட குற்றவாளி தன்னை போன்று இருந்த சகோதரனை சிறையில் வைத்துவிட்டு தப்பியுள்ள சம்பவம் நடந்துள்ளது.

துருக்கியை சேர்ந்த முராத் (19) என்கிற இளைஞர் கொலை குற்றத்திற்காக சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.

இவரது இரட்டை சகோதரன் ஹுசேன் ஒருமுறை முராத்தை சந்திப்பதற்காக சிறைக்கு சென்றுள்ளான். அந்த சமயத்தில் தனக்கு பதிலாக ஹுசேனை சிறையில் வைத்துவிட்டு முராத் அங்கிருந்து தப்பியுள்ளான்.

சிறையில் முக அடையாளம் காணும் இயந்திரம் இல்லாத காரணத்தால் பொலிஸாரால் கூட கண்டறிய முடியவில்லை.

நீண்ட நாட்களுக்கு பிறகு சமீபத்தில் சிறை அதிகாரி ஹுசேனை அடையாளம் கண்டு உயரதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதன்பேரில் தேடுதல் வேட்டை நடத்திய பொலிஸார், வீட்டில் சுதந்திரமாக இருந்த முராத்தை கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.

அதேசமயம் அவருடைய சகோதரன் ஹுசேனும் சிறையில் அடைக்கப்பட்டிருப்பதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் இரட்டையர்கள் என்ன காரணத்திற்காக தங்களுடைய இடத்தை மாற்றிக்கொண்டனர் என்பது குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்