குறும்பு செய்த குழந்தையை நாய் போல சங்கிலியால் கட்டி வைத்த பெற்றோர்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

உக்ரைனில் ஆறு வயது சிறுவன் ஒருவனை அவனது பெற்றோர் நாய் போல் சங்கிலியால் கட்டி வைத்திருப்பதைக் கண்ட பொலிசார் அதிர்ச்சி அடைந்தனர்.

அவனது இடுப்பில் கட்டப்பட்டிருந்த சங்கிலியின் மறுமுனை வீட்டின் கதவுடன் இணைக்கப்பட்டிருந்தது.

அத்துடன் அருவருப்பான அந்த தரையில் முழங்காலிட்டிருந்த அந்த சிறுவன் கைகளையும் உயர்த்தியபடியே இருந்தான்.

வீட்டில் அடிக்கடி சண்டையிடும் அந்த சிறுவனின் தந்தையைக் கண்காணிக்க வந்த பொலிசார், அந்த வீட்டில் ஒரு சிறுவனை சங்கிலியால் கட்டி வைத்திருந்ததைக் கண்டுள்ளனர்.

விசாரித்ததில் அவன் அடிக்கடி குறும்பு செய்வான் என்றும், அதனால் அவனை அப்படி கட்டி வைப்பது வழக்கம் என்றும் சர்வசாதாரணமாக தெரிவித்துள்ளனர் அவனது பெற்றோர்.

இந்த வாரத்துவக்கத்தில் மட்டுமே அவன் பல மணி நேரம் அவ்வாறு கட்டி வைக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

அவனை அவிழ்த்து விடும்படி அவனது தாய்க்கு உத்தரவிட்ட பொலிசார், இனி இப்படி செய்யக்கூடாது என பெற்றோரை எச்சரிக்க, அவர்களும் இனி இப்படி செய்வதில்லை என சத்தியம் செய்துள்ளனர்.

என்றாலும் பொலிசாரும் சமூக சேவை அமைப்புகளும் அவர்களை தொடர்ந்து கண்காணிப்பர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்