வெளிநாட்டில் நல்ல வேலை என நம்பி சென்ற 4 தமிழக பெண்கள்... அங்கு அவர்களுக்கு நேர்ந்த கதி

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

துபாயில் நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனத்தில் பணியில் சேர தமிழகத்தை சேர்ந்த 4 பெண்கள் துபாய்க்கு சென்ற நிலையில் பல்வேறு பிரச்சனைகளுக்கு பின்னர் மீட்கப்பட்டுள்ளனர்.

தமிழகத்தின் கோவையை சேர்ந்த 4 இளம்பெண்களிடம் ஏஜெண்ட் ஒருவர் துபாயில் நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனத்தில் பணி இருப்பதாக கூறி அவரை அங்கு அனுப்பி வைத்துள்ளார்.

துபாய்க்கு நால்வரும் சென்று இறங்கியதும் அவர்களுக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.

அங்கு அவர்களுக்கு வேலை கொடுப்பதாக கூறிய நபர் நால்வரையும் ஒரு அறைக்குள் அடைத்து வைத்துள்ளார்.

பின்னர் மதுபான பாரில் நால்வரும் கட்டாயப்படுத்தி நடனமாட வைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் நால்வரில் ஒரு பெண் தனது குடும்பத்துக்கு எப்படியோ வாட்ஸ் மூலம் தங்களது நிலையை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தகவலறிந்த இந்திய வெளியுறவு துறை அமைச்சர் அங்குள்ள தூதரகத்தை நாடிய நிலையில் இது தொடர்பாக துபாய் பொலிசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

இதையடுத்து நான்கு இளம்பெண்களும் தற்போது பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

இதனிடையில் நால்வரையும் ஏமாற்றி துபாய்க்கு அனுப்பிய ஏஜண்ட் கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்