32 ஆயிரம் குழந்தைகள் மரணம்.. அதிர வைத்த புலம்பெயர்வோர் குறித்த ஐநா அறிக்கை!

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

நாட்டை விட்டு புலம்பெயர்பவர்களில் 32,000 குழந்தைகள் மரணமடைந்துள்ளதாக ஐ.நா வெளியிட்டுள்ள அறிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் மத்திய அமெரிக்காவைச் சேர்ந்த ஆஸ்கர் என்ற நபர், தனது குடும்பத்துடன் அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக நுழைய முயன்றார். அவர் மெக்சிகோவின் எல்லையில் உள்ள ரியோ கிராண்ட் ஆற்றைக் கடக்கும்போது, தனது இரண்டு வயது பெண் குழந்தையுடன் உயிரிழந்தார்.

இதுதொடர்பான புகைப்படம் வெளியாகி உலகை உலுக்கியது. இவ்வாறாக தினமும் தங்கள் நாட்டை விட்டு வெளியேறும் ஆயிரக்கணக்கானவர்களில், ஒரு நாளைக்கு ஒரு குழந்தை உயிரிழக்கிறது அல்லது காணாமல் போகிறது என ஐ.நா அகதிகள் நலன் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது.

அத்துடன் கடந்த 2014ஆம் ஆண்டு முதல் தான் இந்த குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி பார்க்கும்போது, கடந்த 5 ஆண்டுகளில் புலம்பெயரும்போது இறந்த குழந்தைகளின் எண்ணிக்கை 32,000 என்று கூறப்படுகிறது.

இவர்களில் 1,600 குழந்தைகளில் ஆறு மாதத்திற்கு குறைவான வயதுடையவர்கள் என்றும், மத்திய கடல் வழியாக பயணம் செய்வதால் ஏற்பட்ட உயிரிழப்பு 17,900 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அடுத்தபடியாக, மெக்சிகோ வழியாக அமெரிக்காவுக்கு நுழையும் குழந்தைகள், கடந்த ஐந்து ஆண்டுகளில் 1,900 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஐ.நா அறிக்கை தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்