மனைவியை வேறொருவருடன் காரில் நெருக்கமாக பார்த்த கணவன்: அடுத்து செய்த அதிர்ச்சி செயல்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

சீனாவில் பட்டப்பகலில் சொந்த மனைவியை வேறொரு நபருடன் காரில் நெருக்கமாக பார்த்த கணவன், அந்த காரின் மீது குதித்து தாக்குதல் நடத்திய காணொளி காட்சிகள் வெளியாகி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

வடகிழக்கு சீனாவின் ஜிலின் மாகாணத்தில் உள்ள சைபிங் நகரிலேயே குறித்த அதிரவைக்கும் காட்சி நடந்தேறியுள்ளது.

மனைவியை வேறொரு நபருடன் பட்டப்பகலில் காருக்குள் நெருக்கமாக இருப்பதை பார்த்த அந்த நபர், ஆத்திரத்தில் இரும்பு கம்பி ஒன்றை எடுத்துக் கொண்டு தாக்குவதற்கு துரத்தியுள்ளார்.

இருப்பினும் அந்த கார் சாரதி வாகனத்தை நிறுத்தாமல் சென்றுள்ளார். பரபரப்பான அந்த சாலையில் காரின் பானட்டில் சாய்ந்தபடியே இவர் தாக்கத் துவங்கியுள்ளார்.

லீ என மட்டும் தெரியவந்துள்ள அந்த நபர், காரின் பானட்டில் தொங்கியபடியே சுமார் நான்கு கிலோ மீற்றர் தூரம் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இவரது மனைவியுடன் சென்ற ஷாங் என்ற அந்த சாரதி, தமது வாகனத்தை நிறுத்தாமலே சென்றுள்ளார் என உள்ளூர் ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

ஜூன் மாதம் 14 ஆம் திகதி நடந்த இச்சம்பவத்தில், லீ காரின் பானட்டில் சாய்ந்தபடியே, தம்மிடம் இருக்கும் இரும்பு கம்பியால் கண்ணாடியை ஆவேசமாக தாக்குகிறார்.

இதனிடையே ஷாங்கின் வாகனம் இன்னொரு வாகனத்துடன் மோதி சாலையின் ஓரத்தில் நின்றதாக சைபிங் பகுதி பொலிசார் தெரிவித்துள்ளனர்.

கார் நின்றதும் லீ உடனே அந்த நபரையும் தமது மனைவியையும் ஆவேசமாக தாக்கியுள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக லீ மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிசார் தெரிவித்த நிலையில், ஷாங் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். லீயின் மனைவி தொடர்பில் எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers