இளைஞரை இழுத்துக்கொண்ட இறைச்சி அரைக்கும் இயந்திரம்.. கோரமாக போன உயிர்

Report Print Basu in ஏனைய நாடுகள்

பிலிப்பைன்ஸில் இறைச்சி அரைக்கும் இயந்திரத்தில் சிக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

18 வயதான ஜோமர் ஜன்கோ என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இரண்டு வாரங்களுக்கு முன்பு தான் இல்லியோ நகரத்தில் உள்ள சாசேஜ் தொழிற்சாலையில் ஜோமர் வேலைக்கு சேர்ந்துள்ளார்.

சம்பவத்தன்று, இறைச்சி அரைக்கும் இயந்திரத்தை கார்ல் டேவிட் கார்லோஸால் என்ற அனுபவமிக்க பணியாளர் இயக்கி உள்ளார். அவருக்கு உதவியாக ஜோமர் பணிபுரிந்துள்ளார்.

சம்பவத்தின் போது, கார்லோஸால் வெளியே சென்றிருக்கும் நேரம் பார்த்து ஜோமர் இயந்திரத்தை இயக்க முயற்சி செய்துள்ளார். அப்போது, இயந்திரத்தில் அவரது வலது கை சிக்கியுள்ளது. இதனையடுத்து, இயந்திரம் முழுமையாக ஜோமரை உள்ளே இழுத்துள்ளது.

அருகில் இருந்த பணியாளர்கள் ஓடி வந்து உதவுவதற்குள் ஜோமர் தலை இயந்திற்குள் சென்றுள்ளது. இதனால், அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தகவலறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார், ஜோமரின் உடலை மீட்டுள்ளனர். ஜோமர் மூச்சுத் திணறலால் உயிரிழந்ததாக பொலிசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers