அமெரிக்காவின் பொருளாதார தடையால் ஏற்பட்ட மோசமான நிலை! ஈரான் மக்கள் வேதனை

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

அமெரிக்காவின் விதித்த பொருளாதார தடையால் தங்களின் எலும்புகள் உடைந்துவிட்டதாக, ஈரான் நாட்டு மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ஈரான் மக்கள் தொடர் பொருளாதார தடைகளினால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். கடந்த வாரம் அமெரிக்காவின் ஆளில்லா விமானம் மீது, ஈரான் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப், கடுமையான பொருளாதார தடைகளை ஈரான் மீது விதித்தார்.

இதன் காரணமாக ஈரானில் வேலையின்மை அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. குறிப்பாக ஈரானியர்களில் பலர் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மீதும், ஈரான் அரசு மீதும் அதிருப்தியில் இருப்பதாக தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ஈரான் குடிமகன் ஷிவ கேஷாவர்ஸ் கூறுகையில், ‘பொருளாதார போர்தான் இங்கு உண்மை நிலவரம். மக்கள் அனைவரும் பெரும் அழுத்தத்தில் உள்ளனர்.

ஈரானியத் தலைவர்கள் எங்களை வலுவாக இருக்குமாறும், அழுத்தங்களை சகித்துக் கொள்ளுமாறும் கூறியுள்ளனர். ஆனால் எங்கள் எலும்புகள் உடையும் சத்தத்தை ஏற்கனவே நாங்கள் கேட்டுவிட்டோம்’ என தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஈரான் தொடர்ந்து தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டால் போர் தொடுக்கவும் தயங்க மாட்டேன் என்று டிரம்ப் கூறியது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers