மருத்துவர்களின் அஜாக்கிரதை... புற்றுநோயாளி அறுவை சிகிச்சையில் காத்திருந்த அதிர்ச்சி

Report Print Santhan in ஏனைய நாடுகள்

அவுஸ்திரேலியாவில் புற்றுநோய் நோயாளி ஒருவருக்கு மாற்று அறுவை சிகிச்சை நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிட்னியில் இருக்கும் மருத்துவமனை ஒன்றில் கடந்த வாரம் ஆண் நோயாளி ஒருவருக்கு பெருங்குடல் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. புற்றுநோயாளியான இவருக்கு நடத்தப்பட்ட அறுவை சிகிச்சையின் போது, உடலில் இருக்கும் வேறு ஒரு பகுதியை நீக்கியுள்ளனர்.

இந்த விவரம் மருத்துவர்களுக்கு தெரியவர, உடனே அவருக்கு மீண்டும் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிகிச்சை நல்ல படியாக முடிந்துவிட்டதாகவும், ஆனால் நோயாளியின் நிலை குறித்து எந்த ஒரு தகவலும் இல்லை என்று உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.

மேலும் நோயாளியின் தனிச்சுதந்திரம் காரணமாகவே தற்போதைய நிலைக்கு அவரைப் பற்றி எந்த ஒரு தகவலும் தெரிவிக்கவில்லை என்று அங்கிருக்கும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers