ஈரானிடம் பலிக்காத அமெரிக்காவின் திறமை... வெளிச்சத்துக்கு வந்த தோல்வி

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

ஈரான் மீது அமெரிக்கா இணைய தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியான நிலையில் அமெரிக்காவின் முயற்சி வெற்றி பெறவில்லை என ஈரான் தகவல் தொழிநுட்ப துறை அமைச்சர் முகமது ஜாவத் அசாரி கூறியுள்ளார்.

ஈரானின் அணு ஆயுத தவிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகியதால் அவ்விருநாடுகள் இடையே பிரச்சினை ஏற்பட்டது.

இந்த சூழலில் தங்கள் வான்பரப்பில் அத்துமீறி நுழைந்த அமெரிக்காவின் ஆளில்லா உளவு விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்தியது.

இதனால் கோபம் அடைந்த அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், ஈரான் மீது ராணுவ தாக்குதலுக்கு உத்தரவிட்டு, பின்னர் உடனடியாக அதை திரும்பப்பெற்றார்.

ஆனாலும் ஈரானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கை எடுக்க உள்ள கோப்புக்கள் தனது மேசையில் இன்னும் இருப்பதாகவும் அதற்கு எப்போது வேண்டுமானாலும் வேலை கொடுக்க முடியும் என்று அவர் கூறினார்.

அதே சமயம் தன் மீது ஒரு குண்டு விழுந்தால் அதற்காக அமெரிக்கா பன்மடங்கு விலையை கொடுக்க வேண்டியிருக்கும் என ஈரான் எச்சரிக்கை விடுத்தது.

இப்படி நாளுக்குநாள் இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில் ஈரான் மீது அமெரிக்கா இணைய தாக்குதல் நடத்தியதாக தகவல் வெளியானது.

ஈரானின் ராக்கெட் ஏவுகணை அமைப்பை முடக்க இந்த இணைய தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டது.

இந்நிலையில் இது தொடர்பாக பேட்டியளித்துள்ள ஈரான் தகவல் தொழிநுட்ப துறை அமைச்சர் முகமது ஜாவத் அசாரி, அமெரிக்கா, இது தொடர்பில் கடுமையான முயற்சியை மேற்கொண்டும் அவர்களால் வெற்றிகரமாக அதை செய்ய முடியவில்லை என கூறினார்.

அப்படியென்றால் ஈரான் மீது இணைய தாக்குதல் நடத்தப்பட்டது உண்மையா என செய்தியாளர்கள் முகமதிடம் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு, கடந்தாண்டு மட்டும் 33 மில்லியன் இணைய தாக்குதல்களை இணையப் பாதுகாப்பு தொழில்நுட்பம் மூலம் சரிசெய்தோம்.

மேலும் ஈரானிய கணினிகள் மீது நடத்தப்படும் இணைய தாக்குதல்களை சைபர் பயங்கரவாதம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers