வடகொரியா ஜனாதிபதிக்கு முக்கியமான கடிதம் அனுப்பிய டிரம்ப்!

Report Print Santhan in ஏனைய நாடுகள்

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பிடமிருந்து வடகொரியா ஜனாதிபதி அழகான கடிதம் ஒன்றை பெற்றிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.

கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனை மூலம் உலகநாடுகளை மிரட்டி வந்த வடகொரியா, அதன் பின் அதிலிருந்து பின் வாங்கி அமெரிக்காவுடன் பேச்சு வார்த்தை நடத்தியது.

ஏவுகணை சோதனையை கைவிடுவதாகவும் அறிவித்தது. இதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் இரு நாட்டு தலைவர்களும் மீண்டும் சந்தித்து பேசிய போது, சரியான உடன்பாடும் எட்டவில்லை என்பதால் பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது.

இதனால் இருநாடுகளுக்குமிடையே மீண்டும் பதற்றமான சூழ்நிலை ஏற்படலாம் என்று கூறப்பட்டது.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கிம் ஜாங்கிற்கு அற்புதமான கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக பிரபல ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது. அந்த கடிதத்தை படித்து பார்த்த கிம், இது அற்புதமான கடிதம் என்று எண்ணியுள்ளதாக தெரிவித்துள்ளது.

ஆனால் அந்த கடிதத்தில் என்ன எழுதியிருந்தது என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. கடந்த வாரம் ஜனாதிபதி கிம், டிரம்பிற்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதற்கு பதில் அளிக்கும் விதமாக அழகான கடித்தத்தை கிம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers