தாயின் செயலால் அதிர்ந்துபோய் நின்ற மகள்: கண்முன்னே தந்தைக்கு நடந்த பயங்கரம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

விவாகரத்து கேட்ட கணவனை மகளின் கண்முன்னே கத்தியால் குத்தி மனைவி கொலை செய்த சம்பவம் சிங்கப்பூரில் நடந்துள்ளது.

சிங்கப்பூரில் மகளுடன் வசித்து வந்த பிலிப்பைன்ஸ் நாட்டவரான கணவன், மனைவி இருவருக்கும் இடையே கணவரின் வேலைப்பளு காரணமாக அடிக்கடி பிரச்சனை இருந்து வந்துள்ளது.

மனைவியிடம் தினமும் வேலை குறித்து விளக்க முடியாமல் ஒரு கட்டத்தில் விவாகரத்து முடிவுக்கு வந்துள்ளார் கணவர்.

அவருடன் பணியாற்றும் சக ஊழியரிடம், விவாகரத்து செய்துவிட்டு கனடா சென்று செட்டிலாகப் போகிறேன் எனவும் கூறியுள்ளார்.

மட்டுமின்றி கனடாவில் வேலை பார்ப்பது தொடர்பில் தமது மடிக்கணனியில் அவர் தேடுதலும் நடத்தியுள்ளார்.

இந்த தகவலால் ஆத்திரமடைந்த மனைவி கணவரைக் கொலை செய்ய முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு மே மாதம் முதல் திகதி அன்று அதிகாலை 5.30 மணியளவில் பெற்றோர் அறையிலிருந்து அப்பாவின் அலறல் சத்தம் கேட்டு அவர்களது இளம்வயது மகள் ஓடிச்சென்று பார்த்துள்ளார்.

என்னிடம் ஏன் பொய் சொன்னாய் எனக் கேட்டுக் கொண்டே இரண்டு கைகளிலும் கத்தியை வைத்துக் கொண்டு நின்ற தாயைப் பார்த்து மகள் அதிர்ந்து போயுள்ளார்.

மேலும், ஆத்திரத்தில் கணவரைக் கத்தியால் குத்திவிட்டு தன் கையையும் அறுத்துக் கொண்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக மகள் அளித்த தகவலால் அங்கு வந்த பொலிசார் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

இதில் சிகிச்சை பலனின்றி கணவர் இறந்துள்ளார். இறுதியாக அந்தப் பெண் தமது சகோதரிக்கு, என் மகளைப் பத்திரமாகப் பார்த்துக்கொள் என தகவல் ஒன்றை அனுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக அவரது மகள், சம்பவத்தன்று என்ன நடந்தது எனத் தெரியவில்லை. ஆனால் என் அம்மா அப்பாவின்மீது அதீத அன்பு வைத்திருந்தார் எனக் கூறியுள்ளார்.

இந்த வழக்கின் விசாரணை சிங்கப்பூர் நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்