பிரித்தானியார்களுக்கு கத்தி குத்து... தெருவில் இரத்தம்! அதிகாலையில் நடந்த சம்பவம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

ஸ்பெயினில் விற்பனையாளர்களுக்கிடையே நடந்த சண்டையில் நான்கு பிரித்தானியார்கள் படுகாயமடைந்தனர்.

ஸ்பெயினின் மாகால்ப் பகுதியில் இருக்கும் Punta Ballena-வில் இருக்கும் தெருவில் இன்று அதிகாலை உள்ளூர் நேரப்படி 4.15 மணிக்கு தங்களின் தொலைபேசிகளையும் பணப்பையையும் திருடியதாகக் கூறி பிரித்தானியாவைச் சேர்ந்த ஆண்களுக்கும், அங்கிருந்த இரண்டு தெரு விற்பனையாளர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.

இதனால் இது குறித்து உடனடியாக ஆம்புலன்ஸ் மற்றும் பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டது. பொலிசார் மற்றும் ஆம்புலன்ஸ் வருவதற்குள் இரு குழுவினரும் கத்தியால் தாக்கிக் கொண்டதால், காயம் ஏற்பட்டு இரத்தம் வழிந்துள்ளது.

இதில் தாக்குதல் நடத்திய ஒரு நபரை பொலிசார் கைது செய்துள்ளதகாகவும், மற்ற ஐந்து பேருக்கும் காயம் ஏற்பட்டுள்ளதால் அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், காயம் அதிகளவில் ஏற்பட்டுள்ளதே தவிர, உயிருக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை என்று அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த சம்பவம் குறித்து பொலிசார் கூறுகையில், இதில் 5 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் நான்கு பேர் பிரித்தானியாவைச் சேர்ந்தவர்கள் என்பது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. முழு விசாரணைக்கு பின்னரே அவர்களைப் பற்றிய முழு தகவல் தெரியவரும் என்று கூறியுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers