செல்பிக்கு போஸ் கொடுக்காத விமான பணிப்பெண் மீது தாக்குதல்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

வியட்நாமில் உள்ள விமான நிலையம் ஒன்றில் செல்பிக்கு போஸ் கொடுக்க மறுத்த பணிப்பெண் மீது, மதுபோதையில் சில நபர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

வியட்நாமில் வியட்ஜெட் ஏர் என்கிற விமானத்தில் பணிபுரிந்து வருபவர் லு தி கியாங். இவர் பணியில் இருந்த போது அங்கு வந்த லு வான் நி (41), லு ட்ரங் டங் (34) மற்றும் பாம் ஹு அன் (28) என்கிற மூன்று பேரும் செல்பிக்கு போஸ் கொடுக்குமாறு கூறியுள்ளனர்.

கியாங்கும் அவர்களுடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டு புறப்பட்டுள்ளார். அவரை தடுத்து நிறுத்திய அந்த மூன்று பேரும், மேலும் ஒரு செல்பிக்கு போஸ் கொடுக்குமாறு கூறியுள்ளனர்.

அதற்கு மறுத்த கியாங், தான் பணியில் இருப்பதாகவும், விமானம் புறப்பட தயாராகிவிட்டது என்றும் கூறியுள்ளார்.

மதுபோதையில் இருந்த அந்த மூவரும், கியாங் மீது தாக்குதல் நடத்த ஆரம்பித்துள்ளார். இதனை தடுக்க முயன்ற ஆண் ஊழியரையும் அடித்து தரையில் சாய்த்துள்ளனர்.

இந்த நிலையில் கைது செய்யப்பட்ட மூன்று பேரில் நி, மூன்று ஆண்டு சிறைத் தண்டனையை எதிர்கொள்கிறார். டங், இரண்டு ஆண்டுகள் மற்றும் 10 மாதங்கள் மற்றும் ஹு அன், ஒரு வருடம் மற்றும் 10 மாதங்கள் சிறைத்தண்டனையை எதிர்கொள்ள உள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers