3 மாதங்களுக்கு கட்டணமில்லா விசா: வெளிநாட்டவர்களை ஈர்க்க புதிய திட்டம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

கோடைக்கால சுற்றுலாவுக்காக ஐக்கிய அரபு நாடுகளுக்கு வரும் வெளிநாட்டவர்களில் குறிப்பிட்ட பிரிவினருக்கு ஜூலை 15 முதல் செப்டம்பர் 15 வரை இலவச விசா வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள நாடுகளுக்கு சுற்றுலா வரும் பயணிகளுக்கு 14 நாட்களுக்கான விசா கட்டணமாக நபர் ஒன்றுக்கு 497 திர்ஹம்களும் ஒரு மாதத்துக்கு 917 திர்ஹம்களும் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், சுற்றுலா பயணிகளின் வருகையை அதிகரிக்கும் நோக்கில் இந்த ஆண்டின் கோடைக்காலம் முதல் இனி வரும் அனைத்து ஆண்டுகளிலும் சுற்றுலா வரும் வெளிநாட்டினருடன் வரும் 18 வயதுக்குட்பட்ட நபர்களுக்கு கட்டணம் ஏதுமின்றி விசா வழங்க ஐக்கிய அரபு அமீரக அரசு முடிவு செய்துள்ளது.

அவ்வகையில், ஜூலை மாதம் 15 ஆம் திகதியில் இருந்து செப்டம்பர் 15 ஆம் திகதிவரை ஆண்டுதோறும் நடைமுறையில் இருக்கும் இந்த சலுகையால் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என பிரபல பயண ஏற்பாட்டு நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers