விமான கழிவறையில் சிக்கிய குறைமாத சிசுவின் உடல்: தடுத்து நிறுத்தப்பட்ட பயணிகள்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

தென்னாப்பிரிக்காவில் பயணிகள் விமானம் ஒன்றின் கழிவறையில் முழு வளர்ச்சியை எட்டாத சிசுவின் உடல் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து விமானம் புறப்படுவதில் தாமதமானது.

விமான கழிவறையை சுத்தம் செய்த பணியாளர்களே இதை நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர். உள்ளூர் நேரப்படி காலை 6.15 மணியளவில் இச்சம்பவம் நடந்துள்ளது.

இதனையடுத்து விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளையும் வெளியேற்றிவிட்டு, அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.

மட்டுமின்றி இந்த விவகாரம் தொடர்பில் பொலிஸ் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

FlySafair விமான சேவை நிறுவனத்தின் அந்த விமானமானது டர்பன் நகரில் இருந்து ஜோகன்னஸ்பர்க் வரை செல்லவிருந்தது.

இந்த நிலையிலேயே சுத்தம் செய்யும் ஊழியர்களால் சிசுவின் உடல் பாகங்கள் கண்டெடுக்கப்பட்டது. இச்சம்பவத்தை பொலிசாரும் உறுதி செய்துள்ளனர்.

தென்னாப்பிரிகாவை பொறுத்தமட்டில் முழு வளர்ச்சி எட்டாத சிசுவை எவர் ஒருவர் வெளியே வீசினாலும் அது கொலைக் குற்றமாகவே கருதப்படும்.

தற்போது விமான கழிவறையில் இருந்து சிசு ஒன்று மீட்கப்பட்டுள்ளதால், இந்த விவகாரம் தொடர்பில் உரிய விசாரணை மேற்கொள்ளப்படும் என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்