பட்டப்பகலில் இளம்பெண்ணுக்கு நடந்த துயரம்... வீடியோவை வாட்ஸ் அப்பில் பகிர்ந்த ஐவர் படை

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

ஸ்பெயின் நாட்டில் இளம்பெண்ணை சீரழித்து, அந்த வீடியோவை வாட்ஸ் அப்பில் பகிர்ந்த ஐவர் படை இளைஞர்களுக்கு தலா 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கில் கீழமை நீதிமன்றம் அளித்த தண்டனையை அடுத்து நாடுதழுவிய போராட்டம் வெடித்த நிலையிலேயே தற்போது இந்த தண்டனை வெளியாகியுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு San Fermin எனப்படும் எருது விரட்டும் விழாவின்போது, Wolf Pack என தங்களை கூறிக்கொள்ளும் ஐவர் குழு ஒன்று, அப்போது 18 வயதான இளம்பெண்ணை பட்டப்பகலில் சீரழித்துள்ளது.

மட்டுமின்றி அந்த காட்சிகளை காணொளியாக பதிவு செய்து, தாங்கள் உறுப்பினர்களாக உள்ள வாட்ஸ் அப் குழுக்களில் பகிர்ந்துள்ளது.

சம்பவத்தன்று பாதிக்கப்பட்ட இளம்பெண், உருக்குலைந்து அழுதபடியே இருந்ததை கவனித்த தம்பதி, பொலிசாரை அணுகி தகவல் அளித்துள்ளது.

இதனையடுத்து பொலிசார் மேற்கொண்ட விசாரணையில், அந்த ஐவர் படை சிக்கியுள்ளது. இதில் குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர்கள், நடந்த சம்பவம் இரு தரப்பினரும் ஒப்புக்கொண்டதாலையே என நீதிமன்றத்தில் சாதித்துள்ளனர்.

ஆனால், இளம்பெண்ணின் தரப்பில், அது பாலியல் பலாத்காரம் எனவும், பயம் மற்றும் அதிர்ச்சியாலையே குறித்த பெண்ணால் அந்த ஐவர் படையுடன் போராட முடியவில்லை என வாதிட்டுள்ளனர்.

இந்த வழக்கில் கைதான ஜோஸ் ஏஞ்சல் பிரெண்டா, அல்போன்சோ கபேசுவெலோ, அன்டோனியோ மானுவல் குரேரோ, ஜெசஸ் எஸ்குடோரோ மற்றும் ஏஞ்சல் போசா ஐவருக்கும் கீழமை நீதிமன்றம் 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது.

ஆனால் இந்த தண்டனை மிகவும் குறைவு என பொதுமக்கள் போராட்டத்தில் குதித்தனர். நாடு தழுவிய போராட்டம், ஸ்பெயின் நாட்டை ஸ்தம்பிக்க வைத்த நிலையில்,

தற்போது நாட்டின் உயரிய நீதிமன்றம், அந்த ஐவருக்கும் தலா 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளதுடன்,

மிரட்டலுடன் கொள்ளையிட்ட குற்றத்திற்காக 2 ஆண்டு 9 மாதங்கள் மேலும் சிறை தண்டனை விதித்துள்ளது.

மட்டுமின்றி பாதிக்கப்பட்ட இளம்பெண்ணிற்கு 200,000 யூரோ இழப்பீடு வழங்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்