தீப்பெட்டி தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து: குழந்தைகள் உட்பட 30 பேர் உடல்கருகி பலி

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

இந்தோனேசியாவில் தீப்பெட்டி தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட பயங்கரமான தீ விபத்தில் குழந்தைகள் உட்பட 30 பேர் உடல்கருகி பலியாகியுள்ளனர்.

இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள தீப்பெட்டி தொழிற்சாலை ஒன்றில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

அறைகள் பூட்டப்பட்டிருந்ததால், உள்ளிருந்த குழந்தைகள் உட்பட 30 பேர் உடல்கருகி பலியாகியுள்ளனர். அதேசமயம் நான்கு பெண்கள் மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளனர்.

இந்த சம்பவம் அறிந்து வந்த பொலிஸார், இறந்தவர்களின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

எரிவாயு குப்பி வெடித்தால் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். மேலும் இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்