எகிப்திய முன்னாள் ஜனாதிபதி கொல்லப்பட்டார்.. துருக்கி ஜனாதிபதி பரபரப்பு குற்றச்சாட்டு

Report Print Basu in ஏனைய நாடுகள்

எகிப்திய முன்னாள் ஜனாதிபதி முகமது மோர்சி கொல்லப்பட்டதாக துருக்கி ஜனாதிபதி எர்டோகன் குற்றம்சாட்டியுள்ளார்.

நீதிமன்றத்தில் மயங்கி விழுந்து மரணமடைந்த எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி மோர்சி, செல்வாய்க்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டார். மோர்சியின் மறைவுக்கு அவரின் நெருங்கிய நண்பரான துருக்கி ஜனாதிபதி எர்டோகன் உட்பட உலக தலைவர்கள் பலர் இரங்கல் தெரவித்தனர்.

2013 ஆம் ஆண்டு முதல் சிறையில் இருந்த வந்த மோர்சியின் மறைக்கு, எகிப்திய சர்வாதிகாரிகள் தான் காரணம் என துருக்கி ஜனாதிபதி எர்டோகன் குற்றம்சாட்டியுள்ளார்.

சிறையில் அடைக்கப்பட்டு மரணதண்டனை மிரட்டல் விடுத்ததன் மூலம் அவரது மரணத்திற்கு வழிவகுத்த கொடுங்கோலர்களை வரலாறு ஒருபோதும் மறக்காது என மோர்சியின் நெருங்கிய கூட்டாளியான எர்டோகன் இஸ்தான்புல்லில் தொலைக்காட்சி உரையில் கூறியுள்ளார்.

67 வயதில் இறந்த முன்னாள் எகிப்திய ஜனாதிபதி மோர்சியின் மரணம் குறித்து சுயாதீன விசாரணை செய்ய ஐக்கிய நாடுகள் சபை அழைப்பு விடுத்துள்ளதாக எகிப்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்