டிரம்ப் அதற்கு சரிபட்டு வரமாட்டார்: ஈரான் தலைவர் காட்டம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தகுதி வாய்ந்த நபர் இல்லை என ஈரான் நாட்டின் முக்கிய தலைவர் அயதுல்லா காமேனி தெரிவித்துள்ளார்.

அணு ஆயுத சோதனை ஒப்பந்த மீறல் தொடர்பில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே மோதல் போக்கு வலுவடைந்துள்ளது.

இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்புடன் நட்பு பாராட்டி வரும் ஜப்பான் பிரதமர் ஷின்சே அபே ஈரானுக்கு அரசியல் ரீதியான சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஷின்சேவின் இந்த பயணத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றம் தணியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஈரான் தலைவரிடம் இருந்து காட்டமான பதில் வந்துள்ளது.

அதில், தகவல்களை பரிமாறிக் கொள்வதற்கு தகுதியான நபராக டிரம்ப் எனக்கு தெரியவில்லை என தெரிவித்திருந்தார்.

அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற பின்னர், ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தத்தை கடுமையாக விமர்சித்து, அந்த நாடுடனான ஒப்பந்தங்களில் இருந்து அமெரிக்கா விலகுவதாக அறிவித்தார்.

தொடர்ந்து ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்தது. ஆனால் அணு ஆயுத ஒப்பந்தங்களில் பிற நாடுகளின் ஆதரவுடன் ஈரான் தொடர்ந்து வருகிறது. மேலும் இந்த விவகாரத்தில் விதிமுறைகளை பின்பற்ற முடியாது எனவும் ஈரான் சமீபத்தில் தெரிவித்திருந்தது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்