வீட்டில் தலை துண்டிக்கப்பட்டு கிடந்த கர்ப்பிணி பெண்: அதிர்ச்சியடைந்த காதலன்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

ஸ்பெயின் நாட்டில் கர்ப்பிணி பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு நிர்வாணமாக கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்பெயின் நாட்டை சேர்ந்த இசாபெல் எலெனா ரெடானு என்கிற ஆறு மாத கர்ப்பிணி பெண் தன்னுடைய வீட்டின் அறையில் நேற்று மதியம் இறந்து கிடந்துள்ளார்.

வேலை முடிந்து வீடு திரும்பிய அவருடைய காதலன் ஜுவான் வின்செண்டே தான் இதனை முதலில் பார்த்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி தெரிவிக்கின்றன.

இதனை பார்த்து அதிர்ச்சியடைந்தவர் மாலை 4.30 மணியளவில் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனடியாக அங்கு வந்த பொலிஸார் எலெனா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இசாபெல் எலெனாவிற்கு எட்டு வயதில் ஒரு மகள் இருக்கிறார். இதற்கு முன்பு விபச்சார அழகியாக வேலை செய்திருந்தாலும் கூட, அதற்கும் கொலைக்கும் சம்மந்தம் இல்லை என பொலிஸார் கூறியுள்ளனர்.

இசாபெல் பெரும் ஆசையுடன் காதலனின் குழந்தையை வயிற்றில் சுமந்து வந்துள்ளார். இந்த நிலையில் அவர் தலை துண்டிக்கப்பட்ட கொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

இந்த விசாரணையை வாலென்சியா பொலிஸ் தலைமையகம் முன்னெடுத்து வருகிறது. இதுவரை எந்த கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

இதற்கு சாதிவா நகர சபை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது, மேலும் நகர மேயர் ஒரு நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என அறிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்