பெரு நாட்டில் அபூர்வ சக்திகளுக்காக காதலியின் கழுத்தை அறுத்துக்கொலை செய்த காதலனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பெரு நாட்டில் இளைஞர் ஒருவர் தன்னுடைய 16 வயது காதலிக்கு, "இயற்கைக்கு மாறான ஒரு சக்தியை வந்து பார்" என மெசேஜ் செய்திருந்தான்.
மேலும் அந்த மெசேஜை செல்போனில் இருந்து அழித்துவிடுமாறும் கூறியிருந்தான். ஆனால் அதனை அழிக்க மறந்த சிறுமி மாலை 5.30 மணிக்கு வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.
இரவு 10 மணியாகியும் வீடு திரும்பாததால் சந்தேகமடைந்த அவருடைய அம்மா பொலிஸார் தகவல் கொடுத்துள்ளார்.
அதன்பேரில் பொலிஸார் தீவிர விசாரணை மேற்கொண்ட போது, 16 வயது சிறுமி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
மேலும் அவருடைய செல்போனை ஆய்வு செய்த போது, காதலன் கடைசியாக அழைப்பு விடுத்திருந்ததும் தெரியவந்தது.
உடனே கொலைகாரனை அழைத்து விசாரணை மேற்கொள்வதற்காக பொலிஸார் பள்ளிக்கு சென்றுள்ளனர். அங்கு பள்ளி முடிந்து வெளியில் வந்த மாணவனின் செல்போனை ஆராய்ந்த போது, "பொலிஸார் உன்னை தேடுகிறார்கள் என்று கேள்விப்பட்டேன். நான் அவளை கொலை செய்தேன் என்று அவர்கள் ஏற்கனவே அறிந்திருக்கிறார்களா? " என தன்னுடைய 17 வயது நண்பனுக்கு மெசேஜ் செய்திருந்தான்.
இந்த நிலையில் இருவரையும் கைது செய்த பொலிஸார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்ட போது, மனித உயிரை தனக்கு காணிக்கையாக செலுத்தினால் இயற்கைக்கு மாறான அபூர்வ சக்தி கிடைக்கும் என சாத்தான் கூறியதால் கொலை செய்தேன் என கூறியுள்ளான்.
இந்த சம்பவத்தின் போது இரண்டு மாணவர்களும் போதை மருந்து எடுத்துக்கொண்டிருந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் அந்த மாணவியின் கழுத்தில் 10 வெட்டு காயங்கள் இருந்ததாகவும், தலையில் கற்களால் தாக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.