அன்று ஐலான் குர்தி... இன்று உலகத்தின் கண்களை குளமாக்கிய ஆயிஷா: நெஞ்சைப் பிசையும் புகைப்படம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
323Shares

கிழக்கு ஜெருசலேம் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் உயிருக்கு போராடிய சிறுமி ஒருவர் பெற்றோரை காண கடைசியாக முவைத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில், அவர்களை அடையாளம் காணாமலே மரணமடைந்துள்ள சம்பவம் உலக அரங்கை உலுக்கியுள்ளது.

மூளை அறுவை சிகிச்சைக்காக மிகவும் ஆபத்தான கட்டத்தில் பாலஸ்தீனத்தில் இருந்து கிழக்கு ஜெருசலேமில் உள்ள மருத்துவமனை ஒன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார் சிறுமி ஆயிஷா லூலூ.

உயிருக்கு போராடும் நிலையில் பெற்றோரின் அருகாமை தமக்கு இதமாக அமையும் என கருதிய அந்த சிறுமி, மருத்துவமனை நிர்வாகத்திடம், அந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

பாலஸ்தீனத்தில் இருந்து ஒருமணி நேர பயணமே என்றாலும் இஸ்ரேல் அரசு அவர்களின் கோரிக்கையை கண்மூடித்தனமாக நிராகரித்துள்ளது.

இதனால் தங்கள் மகளின் அறுவை சிகிச்சையின்போது அவர்களால் உடனிருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மட்டுமின்றி, சிறுமி ஆயிஷாவின் உதவிக்கு உறவினர் அல்லாத நபர் ஒருவரையும் ஏற்பாடு செய்துள்ளது.

இந்த நிலையில் ஆபத்தான அறுவை சிகிச்சை முடித்த ஆயிஷா கோமா நிலைக்கு தள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இனி மருத்துவ சிகிச்சையால் எந்த பலனும் இல்லை என்ற நிலையில் காசாவில் உள்ள அவரது குடியிருப்புக்கு ஆயிஷாவை திருப்பி அனுப்பியுள்ளனர்.

அறுவை சிகிச்சைக்கு முன்னர் பெற்றோரை ஒருமுறை காண வேண்டும் என ஆசையை வெளியிட்ட ஆயிஷாவுக்கு, அவர்களை அடையாளம் காணும் நிலையில் தற்போது இல்லாதது அந்த பெற்றோரை மேலும் வருத்தியது.

மட்டுமின்றி மருத்துவமனையில் இருந்து குடியிருப்புக்கு திரும்பிய ஒரு வாரத்தில் ஆயிஷாவின் உயிர் பிரிந்துள்ளது.

மருத்துவமனை படுக்கையில் ஆயிஷாவின் புன்னகை தளும்பும் முகம் சமூக வலைதளங்களில் கவனத்தை ஈர்க்கவும்,

தற்போது இஸ்ரேலும் பாலஸ்தீனமும் தங்களுக்கிடயே குற்றஞ்சாட்டி வருகின்றனர். ஜெருசலேமில் உள்ள உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனையில் சிகிச்சைக்காக பல நூறு மனுக்கள் காசாவில் இருந்து குவிந்தாலும்,

கடும் சட்டத்திட்டங்களை வலியுறுத்தும் இஸ்ரேல் சிலரது மனுக்களை மட்டுமே ஏற்றுக்கொண்டு வருகிறது. அன்று அகதிகள் படகு மூழ்கியதில் கொல்லப்பட்ட ஐலான் குர்தியின் புகைப்படம் உலக நாடுகளின் நெஞ்சை உலுக்கியது. இன்று ஆயிஷா லூலூ.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்