குறுஞ்செய்தி அனுப்பியபடி கால்களால் பைக் ஓட்டிய நபர்: அடுத்த கணம் உயிரிழந்த பரிதாபம்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்
169Shares

பைக்கில் சாகஸங்கள் புரியும் ஒருவர், மொபைலில் குறுஞ்செய்தி அனுப்பியபடியே கால்களால் பைக் ஓட்டிச் சென்றபோது விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார்.

போல்ட் என்று அழைக்கப்படும் ரஷ்யாவைச் சேர்ந்த Artem Boldyrev (34) ஒரு சாகச விரும்பி.

அவரது சாகச வீடியோக்களுக்காக யூடியூபில் அவரை 300,000 பேர் பின்தொடர்கிறார்கள்.

தான் கால்களால் பைக் ஓட்டும் வீடியோவை நண்பர் ஒருவருக்கு அனுப்பிய சற்று நேரத்தில் அவரது பைக் விபத்தில் சிக்க, பரிதாபமாக உயிரிழந்துள்ளார் Artem.

Artemஇன் நண்பர்கள், அவர் எப்போதும் தலைக்கவசம் அணியாமல்தான் பைக் ஓட்டுவார் என்றும், விபத்தில் சிக்கினால், கை கால் செயல்படாமல் படுக்கையில் கிடப்பதை விட, இறந்து விடுவதையே தான் விரும்புவதாக அவர் தெரிவிப்பதுண்டு என்கின்றனர்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக விபத்தில் சிக்கிய அன்று அவர் தலைக்கவசம் அணிந்திருந்திருக்கிறார்.

விழுந்த வேகத்தில் அவரது தலைக்கவசம் சிதற, அவர் உயிரிழந்துள்ளார்.

தான் எதை விரும்பினாரோ அதை செய்யும்போதே Artem உயிரிழந்துள்ளதாக கூறி, அவருக்கு தங்கள் அஞ்சலியை செலுத்தி வருகிறார்கள் அவரை பின்தொடர்பவர்கள்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்