வடகொரிய ஜனாதிபதி கிம் ஜாங் உன் சகோதரர் அமெரிக்க உளவாளியா? வெளிவரும் தகவல்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

மலேசியாவில் கொல்லப்பட்ட வடகொரிய ஜனாதிபதியின் சகோதரர் கிம் ஜாங் நாம், பல ஆண்டுகள் அமெரிக்க உளவாளியாக செயல்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த தகவலை அமெரிக்கா இதுவரை மறுக்கவோ உறுதி செய்யவோ இல்லை என தெரியவந்துள்ளது.

கிம் நாம் தொடர்பான இந்த தகவலை வெளியிட்ட அந்த பத்திரிகையானது, கிம் நாம் மற்றும் அமெரிக்கா தொடர்பான தகவல்கள் அனைத்தும் தெளிவற்ற தன்மையுடனே உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளது.

கிம் நாம் மற்றும் அமெரிக்காவின் உளவு அமைப்பான சி.ஐ.ஏ இடையே நெருக்கமான தகவல் தொடர்பு இருந்ததாகவும், இதை பல முன்னாள் அமெரிக்க அதிகாரிகள் உறுதி செய்துள்ளதாகவும் அந்த பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.

வடகொரியாவை விட்டு பல ஆண்டுகள் வெளியே குடியிருந்த கிம் நாம், குறிப்பிட்ட அளவுக்கு செல்வாக்கு ஏதும் வடகொரியாவில் இல்லாதவர் என்றே கூறப்படுகிறது.

மேலும், கிம் ஜாங் உன் ஆட்சி மற்றும், வடகொரியாவின் அரசியல் தொடர்பில் அவருக்கு தெளிவான எந்த பார்வையும் இல்லை எனவும்,

அமெரிக்காவுக்கு தேவையான தகவலை திரட்ட அவரால் கடைசி வரை முடியாமல் போனது என்றே தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்கா உளவு அமைப்புடன் மட்டுமல்ல, சீனா உள்ளிட்ட சில நாடுகளின் உளவு அமைப்புகளுடனும் கிம் நாமுக்கு தொடர்பு இருந்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

இதன் காரணமாகவே கிம் நாம் கொல்லப்பட்டிருக்கலாம் என தெரியவந்துள்ளது. கிம் நாம் கொலை தொடர்பில் விசாரணை மேற்கொண்ட தென் கொரியா மற்றும் அமெரிக்க அதிகாரிகள்,

இந்த விவகாரத்தில் வடகொரிய அதிகாரிகளின் பங்கு இருக்கலாம் என முன்னரே சந்தேகம் எழுப்பியிருந்தனர். 2017 ஆம் ஆண்டு மலேசிய விமான நிலையத்தில் காத்திருந்த கிம் ஜாங் நாம் மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.

இந்த வழக்கில் வியட்நாம் மற்றும் இந்தோனேசிய பெண்கள் இருவர் கைதாகி இந்த ஆண்டு மார்ச் மாதம் விடுவிக்கப்பட்டனர்.

மலேசிய விமான நிலையத்தில் அமெரிக்க அதிகாரி ஒருவரை ரகசியமாக சந்திக்க காத்திருந்த நிலையிலேயே கிம் நாம் கொல்லப்பட்டுள்ளார்.

மட்டுமின்றி, அமெரிக்க உளவாளியை சந்திப்பது மட்டுமல்ல கிம் நாமின் நோக்கம் எனவும், வேறு பல காரணங்களும் இருந்திருக்கலாம் எனவும் தற்போது நிபுணர்கள் சிலர் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்