போலந்தில் பற்றியெரியும் அடுக்குமாடிக் கட்டிடம்: ஸ்தம்பித்த நகரம்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

போலந்து தலைநகரில் அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்று பற்றியெரிவதையடுத்து நகரமே ஸ்தம்பித்துள்ளது.

போலந்து நாட்டின் தலைநகரான Warsawவில் உள்ள அடுக்குமாடிக் கட்டிடம் ஒன்று பற்றியெரிவதையடுத்து அப்பகுதியில் மக்கள் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் நேரப்படி இரவு 11 மணிக்கு அந்த தீவிபத்து ஏற்பட்டதையடுத்து, எரிந்து விழும் கட்டிடத்தின் பாகங்கள் விழுந்து பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதால் நகரமே மக்கள் பயன்பாட்டுக்கு அனுமதிக்கப்படவில்லை.

426 அடி உயரம் உள்ள அந்த கட்டிடத்தின் 25ஆவது தளத்திலிருந்து தீப்பிளம்புகள் கீழே விழுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்த கட்டிடத்தின் மேல் பகுதியிலுள்ள நான்கு தளங்களில் தீப்பற்றி எரிவதாகவும், தீயை கட்டுப்படுத்த 60 தீயணைப்பு வீரர்கள் களத்திலிருப்பதாகவும் போலந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அந்த கட்டிடம் இன்னும் பயன்பட்டுக்கு விடப்படாததால் கட்டிடத்தில் யாரும் இல்லை என்றும் அதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்றும் தீயணைப்பு வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்