உயிரை மாய்த்துக் கொண்ட 17 வயது இளம்பெண்: நெருக்கடியில் சிக்கிய கருணைக்கொலை மையம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

நெதர்லாந்தில் உள்ள கருணைக்கொலை மையம் ஒன்று உளவியல் ரீதியாக துன்பப்பட்டு வந்த இளம்பெண்ணுக்கு உதவியதாக வெளியான தகவலை அடுத்து நெருக்கடிக்கு உள்ளானதாக தகவல் வெளியாகியுள்ளது.

நெதர்லாந்தின் ஹேக் நகரில் அமைந்துள்ளது உலகின் உத்தியோகப்பூர்வ கருணைக்கொலை மையங்களின் ஒன்று.

இங்கு கடந்த ஞாயிறு உளவியல் ரீதியாக சிறுவயது முதலே துன்பட்டுவந்த 17 வயது இளம்பெண் கருணைக்கொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.

இதனையடுத்து அந்த கருணைக்கொலை மையத்திற்கு உலகெங்கிலும் இருந்து சுமார் 25 தொலைபேசி அழைப்புகள் வந்து குவிந்துள்ளது.

ஆனால் ஹேக் நகரின் அந்த கருணைக்கொலை மையமானது இதற்கு மறுப்பு தெரிவித்துள்ளதுடன்,

நோவா போத்தோன் என்ற அந்த 17 வயது இளம்பெண், தங்களது மையத்தில் கருணைக்கொலை செய்துகொள்ளவில்லை எனவும்,

நீண்ட நாட்கள் உணவருந்த மறுத்த நிலையில், அவரே தமது உயிரை மாய்த்துக் கொண்டார் என்று விளக்கம் அளித்துள்ளது.

மேலும், ஒருவர் நெதர்லாந்துக்கு வந்திறங்கியதும், அவரை கருணைக்கொலைக்கு உட்படுத்த முடியாது எனவும் அந்த மையத்தின் நிர்வாக இயக்குனர் ஸ்டீவன் ப்லேட்டர் தெரிவித்துள்ளார்.

நோவா போத்தோன் சிறுவயதில் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு, அதனால் ஏற்பட்ட உளவியல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம், ஹேக் நகரத்தில் அமைந்துள்ள கருணைக்கொலை மையம் தமக்கு உதவ முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை நோவா போத்தோன் முன்வைத்தார்.

ஆனால் அவரது கோரிக்கையை குறித்த மையம் நிராகரித்ததாகவும், இளம்வயதுடையோருக்கு தாங்கள் உதவ முடியாது என விளக்கமளித்துள்ளதாகவும் ஸ்டீவன் ப்லேட்டர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த 7 ஆண்டுகளில் மட்டும் உலகெங்கிலும் இருந்து சுமார் 12,000 முதல் 13,000 அழைப்புகள் கருணைக்கொலைக்கு உதவி கோரி வந்துள்ளதாகவும், அதில் 3,500 பேருக்கு உதவியதாகவும் அந்த மையம் தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்