சர்வதேச அளவில் 15 வயதுக்கு முன் திருமணத்திற்குள் தள்ளப்படும் சிறுவர்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்

Report Print Kabilan in ஏனைய நாடுகள்

உலகளவில் 5யில் ஒரு சிறுவர் 15 வயதுக்கு முன்னதாகவே திருமண பந்தத்துக்குள் தள்ளப்படுவதாக யுனிசெஃப் அமைப்பு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

சர்வதேச அளவில் 11.5 கோடி ஆண் பிள்ளைகள் குழந்தைத் திருமணத்துக்கு ஆளாவதாக, யுனிசெஃப் நடத்திய ஆய்வில் தெரிவித்துள்ளது. சுமார் 82 நாடுகளில் இதற்கான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, கரீபியன் தீவு, தெற்காசியா, கிழக்கு ஆசிய நாடுகள் மற்றும் பசிபிக் பிராந்தியங்களில், அதிகளவில் ஆண் குழந்தைத் திருமண முறை அமலில் இருப்பதாக இந்த ஆய்வு அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

இந்த ஆய்வின் படி உலகளவில் உள்ள சுமார் 23 மில்லியன் ஆண் பிள்ளைகள், அதாவது 5யில் ஒரு சிறுவர் 15 வயதுக்கு முன்னதாகவே திருமண பந்தத்துக்குள் தள்ளப்படும் சூழல் இருக்கிறது என தெரிய வந்துள்ளது. அதிகபட்சமாக மத்திய ஆப்பிரிக்காவில் 28 சதவித ஆண் பிள்ளைகளுக்கு, 15 வயதிற்கு முன்பாக திருமணம் செய்துவைக்கப்படுவதாக இந்த ஆய்வு கூறுகிறது.

மேலும், குழந்தை திருமணங்கள் அதிகமாக நடைபெற ஏழ்மையான சூழல், கிராமப்புற வாழ்க்கை, கல்வியறிவு இன்மை ஆகியனவற்றை முக்கிய காரணங்களாக இந்த ஆய்வு குறிப்பிட்டுள்ளது.

யுனிசெஃப் ஆய்வு குறித்து அதன் நிர்வாக இயக்குநர் ஹென்ரீட்டா ஃபோர் கூறுகையில், ‘குழந்தை திருமணம் என்பது பால்ய பருவத்தைத் திருடிவிடுகிறது. குழந்தை திருமணம் அந்தக் குழந்தையின் மீது வயது வந்த நபருக்கான பொறுப்பை சுமத்துகிறது. அந்தப் பொறுப்பை ஏற்கக்கூடிய வயதில் அவர்கள் இல்லாத சூழலில் அது அவர்களுக்கு சுமையாகிறது.

அதேபோல் இளம் வயதிலேயே தந்தையாவதால் சிறுவர்கள் குடும்பத் தேவையை கவனிக்கும் நெருக்கடிக்கு ஆளாகின்றனர். இதனால் கல்வி பாதிக்கப்படுகிறது. நல்ல வேலை வாய்ப்புகள் நழுவிப் போகின்றன’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்