வெளிநாட்டுக்கு பல்வேறு கனவுகளுடன் சென்ற தமிழர்... அங்கு அவருக்கு நேர்ந்த கதி... வெளியான வீடியோ

Report Print Raju Raju in ஏனைய நாடுகள்

வெளிநாட்டுக்கு வேலைக்காக ஆசையாக சென்று 3 மாதங்களாக வேலையின்றி, உண்ண உணவுமின்றித் தவிக்கும் தமிழர் உருக்கமான வீடியோவை வெளியிட்டுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தின் குளச்சலை சேர்ந்தவர் ஜோய்.

பொறியியல் பட்டதாரியான இவர் திருப்பூரைச் சேர்ந்த முகவர் ஒருவரிடம் 3 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய் பணம் கட்டி வேலைக்காக கத்தார் சென்றுள்ளார்.

அவரோடு சேர்த்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 30க்கும் மேற்பட்டோர் கத்தார் சென்றுள்ளனர்.

கத்தாரில் விமான நிலையத்தில் பல கனவுகளுடன் வந்து இறங்கிய ஜோய் மற்றும் அவருடன் வந்தவர்களை நபர் ஒருவர் அறை ஒன்றில் தங்கவைத்துவிட்டு தலைமறைவாகியுள்ளார்.

இந்நிலையில் 3 மாதங்களாக அந்த அறையில் உண்ண உணவின்றி தவிப்பதாகவும் அறை வாடகை செலுத்தாததால் தங்களது பாஸ்போர்ட்களையும் பிடுங்கி வைத்துள்ளதாகவும் ஜோய் வாட்சப்பில் பேசி வீடியோவை உறவினர்களுக்கு அனுப்பியுள்ளார்.

இந்த வீடியோவுடன் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு வந்த பொறியாளரின் பெற்றோர், தங்கள் மகனை மீட்டுத் தருமாறு கண்ணீருடன் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்