75 அடி நீள ரயில் பாலத்தைக் காணோம்.. குழம்பி தவிக்கும் ரஷ்யா பொலிஸ்

Report Print Basu in ஏனைய நாடுகள்

ரஷ்யாவில் இரும்பு ரயில் பாலம் காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முர்மன்ஸ்க் பகுதியில் உள்ள உம்பா நதியின் மேல் இருந்த 56 டன் எடை கொண்ட 75 அடி நீள பாலமே இவ்வாறு திடீரென காணாமல் போயுள்ளது.

மே மாதமே பாலம் மர்மமான முறையில் காணாமல் போனதாக ரஷ்ய சமூக வலைதளத்தில் தகவல் பரவியது. மே 16ம் திகதி பாலத்தின் ஒரு பகுதி நீரில் மூழ்கியதாக ரஷ்ய இணையதளம் ஒன்று வெளியிட்ட புகைப்படங்கள் வெகுவாக பரவின.

அந்த புகைப்படங்களில் காணாமல் போன பாலத்தின் சுவடுகள் ஏதும் இல்லை. பாலம் கீழே விழுந்து உடைந்திருந்தால், அதன் இடிபாடுகள் இருக்க வேண்டும். ஆனால், சுத்தமாக பாலமே காணோம் என்பது தான் தற்போது அதிர்ச்சிக்குள்ளாகி இருக்கிறது என குறித்த இணையதளம் குறிப்பிட்டுள்ளது.

திருடர்கள் இந்தப் பாலத்தை திருடிச்சென்றிருக்கலாம் என உள்ளூர் வாசிகள் சந்தேகிக்கின்றனர். எனினும், திருடர்கள் எப்படி இதை திருடிச் சென்றிப்பார்கள் என்பதும் கேள்வி குறியாக உள்ளது. காணாமல் போன 56 டன் எடை கொண்ட 75 அடி நீள பாலத்தின் மர்மத்தை கண்டறிய விசாரணை முடுக்கி விடப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்