11டன் குப்பைகள் - நான்கு உடல்கள்... எவரஸ்ட் சிகரத்தில் சிக்கியது எப்படி..?

Report Print Abisha in ஏனைய நாடுகள்

எவரஸ்ட் மலைப்பகுதியில் மலை ஏற்றம் செல்பவர்களால் போடப்பட்ட 11டன் குப்பைகள் அகற்றப்பட்டு நான்கு உடல்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

எவரஸ்ட் மலை பகுதி மலையேற்றம் செல்பவர்களுக்கான கனவு என்றுதான் செல்ல வேண்டும்.

கடல்மட்டத்திலிருந்து 8,848 கிலோ மீற்றர் தூரம் கொண்ட இந்த மலைப்பகுதி எப்போதும் பனி நிறைந்தே காணப்படுகின்றது. அங்கு செல்பவர்கள் தங்களுக்கு தேவையான உணவுகள், மருந்து பொருட்கள், மது பாட்டில்கள் என்று அனைத்தையும் எடுத்து செல்கின்றனர்.

இந்நிலையில் அங்கு அவர்களால் விடப்படும் குப்பைகளை சுற்றுசூழல் பாதிப்பு ஏற்படுத்துவதாக சுத்தம் செய்யும் பணயினை நேப்பாள அரசு, அந்நாட்டு இராணுவத்துடன் இணைந்து ஏப்ரல் மாதம் 14ஆம் திகதி துவங்கியது.

இதில் 11ஆயிரம் கிலோ குப்பைகள் சேகரிக்கப்பட்டு அகற்றப்பட்டுள்ளது. மேலும், நான்கு மனித உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளது. இந்த உடல்கள் மலைப்பகுதியில் ஏறுபவர்கள் அங்கு எவரேனும் இறந்தால் அவர்களின் உடல்களை தூக்கி வர இயலாது என்று விட்டுவிட்டு செல்வர் அவர்களின் உடலாக இருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்