துப்பாக்கி முனையில் இருந்து எஜமானரை காப்பாற்றிய செல்லப்பிராணிகள்: சுவாரஷ்ய வீடியோ

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

துப்பாக்கி முனையில் கொள்ளையர்களிடம் சிக்கிக்கொண்ட எஜமானரை, வளர்ப்பு நாய்கள் காப்பாற்றும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

அர்ஜென்டினாவின் பியூனஸ் அயர்ஸ் பகுதியில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அப்பகுதியில் உள்ள சாலையில் சாதாரணமாக நடந்து வரும் இரண்டு நபர்கள், திடீரென கார் பக்கத்தில் நின்று கொண்டிருந்த நபரை நோக்கி துப்பாக்கியை நீட்டுகின்றனர்.

எஜமானர் கூச்சலிடம் சத்தம் கேட்டதும், காருக்குள் இருந்த இரண்டு வளர்ப்பு நாய்கள் வேகமாக வெளியில் வருகின்றன.

அவற்றை பார்த்த இரண்டு கொள்ளையர்களும் என்ன செய்வதென தெரியாமல் அங்கிருந்து ஓட்டம் பிடிக்கின்றனர்.

இந்த காட்சியானது அந்த நபரின் வீட்டில் இருந்த உள்ள சிசிடிவியில் பதிவாகியிருந்தது. அதனை கைப்பற்றி தற்போது பொலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவத்தின் போது கொள்ளையன் துப்பாக்கியால் சுட்டதில், ஒரு நாய்க்கு மட்டும் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்