யாருடனும் பேசவோ, சந்திக்கவோ கூடாது என்ற கட்டுப்பாடுகள்... நரம்புகள் தளர்ந்து மரண படுக்கையில் முன்னாள் அதிபர்...

Report Print Abisha in ஏனைய நாடுகள்

பாகிஸ்தானின் முன்னாள் ராணுவ ஆட்சியாளர் பர்வேஸ் முஷரப் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

துபாயில் வசித்துவரும் முஷரப், இவர் மீது ராஜ துரோகம் செய்ததாக வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. அவர் மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக 2016-ம் ஆண்டு துபாய்க்கு சென்றார்.

இந்நிலையில் துபாயில் தங்கி இருந்த அவருக்கு சில தடைகள் விதிக்கப்பட்டது. அதாவது, அவர் யாருடனும் பேசவோ, சந்திக்கவோ கூடாது என உத்தரவிடப்பட்டது.

இதனை அடுத்து அவர் நரம்புகள் வலுவிழந்து நிற்பதற்கும், நடப்பதற்கும் சிரமப்பட்டு வந்தார்.

தொடர்ந்து, உடல்நிலை காரணமாக பாகிஸ்தானுக்கு செல்லமுடியாத நிலையில் இருப்பதால் வழக்கு விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு, ஜூன் 12-ந் தேதிக்கு ஒத்திவைத்தது.

அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால் நேற்று அவர் துபாயில் உள்ள மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்நிலையில் சமூகவலை தளங்களில் அவர் இறந்துவிட்டதாக பல தகவல்கள் வெளியானது. இது குறித்து அவரின் நெருங்கிய வட்டாரங்கள், அவருக்கு தீவிரசிகிச்சை பிரிவில் மருத்துவம் பார்க்கப்பட்டு வருவதாகவும், விரைவில் குணமடைவார் என்றும் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்