தேனிலவின்போது சுட்டுக்கொல்லப்பட்ட இந்திய வம்சாவளிப்பெண்: கொலையாளியை தேடி களமிறங்கிய தந்தை!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

தென்னாப்பிரிக்காவுக்கு தேனிலவுக்கு கணவருடன் சென்ற இந்திய வம்சாவளியினரான ஒரு பெண் சுட்டுக் கொல்லப்பட்ட வழக்கில், உண்மையைத் தேடி பெண்ணின் தந்தையே களமிறங்கியுள்ளார்.

2010ஆம் ஆண்டு இந்திய வம்சாவளியினரான Anni Dewani, தென்னாப்பிரிக்காவில் தனது கணவருடன் தேனிலவுக்கு செல்லும்போது மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.

அவரை மூன்று பேர் காரில் கடத்திச் சென்று விட்டதாகவும் தான் மட்டும் தப்பி வந்து விட்டதாகவும் Anniயின் கணவரான Shrien கூறியிருந்தார்.

Anniயின் கொலை வழக்கிலிருந்தும் அவர் 2014ஆம் ஆண்டு விடுவிக்கப்பட்டார். Anniயை கடத்தி கொலை செய்ததாக Zola Tongo என்பவரும் மற்றும் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

வழக்கு விசாரணையில் உதவியதற்காக Tongoவுக்கு குறைவான தண்டனை வழங்கப்பட்டுள்ளதால் அவன் விரைவில் விடுவிக்கப்பட வாய்ப்புள்ளது.

ஆனால், Tongo வழக்கு விசாரணையின்போது கூறியதை விட அவனுக்கு அதிகமான விடயங்கள் தெரியும் என்று தான் நம்புவதாக தெரிவித்துள்ள Anniயின் தந்தையான Mr Hindocha, அவனுடன் தொலைபேசியில் பேசினார்.

அத்துடன் தென்னாப்பிரிக்கா செல்லும் அவர், தனது மகள் எப்படி கொல்லப்பட்டார் என்பதை அறியும் முன், தான் வீடு திரும்பப்போவதில்லை என்று கூறியுள்ளார்.

தற்போது மும்பையில் ஒரு ஆண் நண்பருடன் வசித்து வருகிறார் Shrien.

Shrien ஒரு ஓரினச்சேர்க்கையாளர் என்பதை மறைத்தே தனது மகளை அவர் திருமணம் செய்ததாக கூறும் Hindochaவுக்கு, தனது மகளை ஆள் வைத்து கொன்று விட்டதாக தனது மருமகனான Shrien மீது சந்தேகம்.

ஏனென்றால், Anni கொலை செய்யப்படுவதற்கு முன்னும், கொலை செய்யப்பட்ட பின்னரும் Tongoவுடன் அவர் பேசியதும் பணம் கொடுத்ததும் CCTV கெமராவில் பதிவாகியுள்ளது.

எனவே, Tongoவை சந்தித்து, எப்படியாவது அவனிடமிருந்து உண்மையை தெரிந்து கொள்ள விரும்புகிறார் Anniயின் தந்தையான Mr Hindocha.

அதற்காக அவர் தனது சகோதரருடன் தென்னாப்பிரிக்கா கிளம்பியுள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்