தொழுகையில் இருந்த மக்கள்... வெடித்துச் சிதறிய வெடிகுண்டு: பலர் படுகாயம்

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

பாகிஸ்தானின் குவெட்டா பகுதியில் மசூதி மீது தீவிரவாதிகள் முன்னெடுத்த வெடிகுண்டு தாக்குதலில் இருவர் பலியானதாகவும் பலர் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

குவெட்டா பகுதியில் உள்ள மசூதி ஒன்றில் சுமார் 30 முதல் 40 எண்ணிக்கையிலான பொதுமக்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்துள்ளனர்.

அப்போது திடீரென்று வெடிகுண்டு வெடித்ததாக கூறப்படுகிறது. இதில் இருவர் சம்பவயிடத்திலியே கொல்லப்பட்டதாகவும் 14 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

பலூசிஸ்தான் முதலமைச்சர் ஜம் கமல் கான் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளதுடன், குறித்த தாக்குதல் தொடர்பில் முழு விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார்.

ரம்ஜான் மாதத்தில் வெள்ளிக்கிழமை தொழுகையின்போது மசூதி மீது நடத்தப்பட்ட இந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை என கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்