நடுவானில் திடீரென விமானத்தின் கதவை உடைக்க முயன்ற நபர்

Report Print Vijay Amburore in ஏனைய நாடுகள்

சீனாவில் மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு பயணி நடுவானில் பறந்துகொண்டிருந்த விமானத்தின் கதவை திடீரென உடைக்க முயன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் Fuzhou ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த 50 வயது பயணி ஒருவர் திடீரென வினோதமாக நடந்துகொண்டுள்ளார்.

பின்னர் வேகமாக விமான பணியாளரிடம் சென்று, வீட்டிற்கு போன் செய்ய வேண்டும் என கூறியுள்ளார். சிக்னல் இங்கு கிடைக்காது என அவர் கூறியதும், நேராக கதவை நோக்கி சென்றுள்ளார்.

இதனை பார்த்த பாதுகாப்பு அதிகாரி ஜாவோ வென்ஹூய் அங்கிருந்து செல்லமாறு அறிவுறுத்தியுள்ளார். ஆனால் அந்த நபர், எனக்கு உடனே பாராசூட் வேண்டும் என கூறிக்கொண்டே கதவை உடைக்க ஆரம்பித்துள்ளார்.

இதனை பார்த்து அதிச்சியடைந்த அதிகாரி, பணியாளரின் உதவியுடன் அவரை அங்கிருந்து இருக்கைக்கு இழுத்து சென்றுள்ளார்.

அப்போது அவர் செல்போனை வீசியெறிந்து கண்ணாடியை உடைக்க முயன்றதால் விமானத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜாவோ வென்ஹூய் கூறுகையில், விமானம் தரையிறங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பு தான் இந்த சம்பவம் நடந்தது. இதில் விமான பணியாளர் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்