நரகத்திலிருந்து வந்திருக்கிறேன்! சத்தமிட்டவாறு தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய ராணுவ வீரர்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

எனது இலக்கை நிறைவேற்றுவதற்காக நரகத்திலிருந்து வந்திருக்கிறேன் என சத்தமிட்டவாறு தேவாலயத்திற்குள் நுழைந்த ஒரு ராணுவ வீரர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பிரேசிலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லெப்டினண்ட் கர்னல் Rudson Aragão Guimarães (39), திடீரென தேவாலயம் ஒன்றிற்குள் நுழைந்து துப்பாக்கியால் சுட்டதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

வெளியாகியுள்ள வீடியோவில் தேவாலயத்தின் கதவை வலுக்கட்டாயமாக திறந்து கொண்டு நுழையும் அந்த நபர், தான் பாதிரியாரைக் கொல்ல வந்துள்ளதாக சத்தமிடுவதைக் காணலாம்.

வீடியோவை காண

அதைக் கேட்ட பாதிரியார் தப்பியோடி சுவர் ஏறி குதிக்கும்போது தனது குதிங்காலை உடைத்துக் கொண்டாலும் உயிர் தப்பினார். ஆனால் தேவாலயத்திற்குள் இருந்தவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டிருக்கிறார் Rudson.

துப்பாக்கி சத்தம் கேட்டு அவ்வழியே ரோந்து சென்ற பொலிசார் Rudsonஐ துப்பாக்கியால் சுட, மார்பில் குண்டு பாய்ந்து சாய்ந்திருக்கிறார் அவர்.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட Rudsonக்கு அவசர அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்ட நிலையில் அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதற்கிடையில், தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தும் முன் தனது தாயாரின் வீட்டிலிருந்த தனது காதலியை கத்தியால் Rudson குத்த, சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருக்கிறார் அவர்.

ஒருவேளை Rudsonஇன் காதலிக்கும் பாதிரியாருக்கும் தொடர்பிருந்திருக்கலாம் என முன்பு கூறப்பட்டதை மறுத்துள்ள பொலிசார், உயிரிழந்தவர்களுக்கும் Rudsonக்கும் என்ன தொடர்பு என்ற கோணத்தில் விசாரிக்க தொடங்கியுள்ளார்கள்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்