வானத்தில் தெரிந்த இயேசுவின் உருவம்: வைரலான புகைப்படம்!

Report Print Balamanuvelan in ஏனைய நாடுகள்

அர்ஜெண்டினாவில் வானத்தில் தெரிந்த இயேசுவின் உருவத்தை ஒரு பெண் புகைப்படம் எடுத்துள்ளார்.

San Salvador நகரில் Monica Aramayo என்ற பெண் இந்த புகைப்படத்தை எடுத்துள்ளார்.

வானத்தில் பிரகாசித்த சூரிய ஒளி மேகங்களின் வழியாக வெளி வரும்போது அது ஒரு உருவம் போல் தெரிகிறது.

அதைப் பார்க்க இயேசு தனது கைகளை விரித்து நிற்பது போலவே இருக்க, உடனடியாக அதை தனது ஸ்மார்ட் போனில் புகைப்படம் எடுத்த Monica, அந்த புகைப்படத்தை சமூக ஊடகத்தில் பதிவேற்றம் செய்ய, உடனடியாக அது வைரலாகியுள்ளது.

கத்தோலிக்க தேவாலயங்களில் வரையப்பட்டிருக்கும் இயேசுவின் உருவத்தைப்போலவே அது இருப்பதாக பலர் கருத்து தெரிவித்திருந்தனர்.

வேறு சிலர் அது பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் இருக்கும் இயேசுவின் சிலை போல் இருப்பதாக தெரிவித்திருந்தனர்.

சிலர், அந்த உருவத்தின் தலையும் சிலுவையில் அறையப்பட்டிருந்த இயேசுவின் தலையில் முட்கிரீடம் சூட்டியது போல் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

சமூக ஊடக பயனரான Mariela Romano, இயேசு சீக்கிரம் வரப்போகிறார், நாம் அவரை சந்திக்க தயாராக இருக்க வேண்டும் என பதிவிட்டிருந்தார்.

Carlos Daniel Nieva என்பவர், இந்த படத்துக்காக நன்றி, அது நாம் சீரான வழியில் செல்ல உதவுவதோடு, நாளையை சந்திக்கும் நம்பிக்கையையும் கொடுக்கிறது என்று எழுதியிருந்தார்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்