உடல் முழுவதும் வண்ணம் பூசி பெண் உட்பட எழுவரை நிர்வாணமாக ஊர்வலம் நடத்திய கும்பல்: அதிர்ச்சி பின்னணி

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்

மெக்சிக்கோ நகரமான நியூவோ லாரெடோ பகுதியில் போதை மருந்து கடத்தல் கும்பல் ஒன்று பெண் உட்பட ஏழு பேரை உடல் முழுவதும் வண்ணம் பூசி நிர்வாணமாக ஊர்வலம் நடத்தியுள்ள புகைப்படங்கள் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைதளங்களில் வெளியான அந்த புகைப்படத்தில் பெண் ஒருவரும் 6 ஆண்களும் உடல் முழுவதும் வண்ணங்கள் பூசிக்கொண்டு தெருவில் தனித்துவிடப்பட்ட நிலையில் காணப்பட்டனர்.

மெக்சிக்கோவில் உள்ள முக்கிய போதை மருந்து கடத்தல் கும்பலே இந்த வன்முறைக்கு காரணம் என உள்ளூர் செய்தி ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

மட்டுமின்றி அவர்கள் ஏழு பேரையும் அந்த கும்பலானது நகரின் வரலாற்றுச் சிறப்புமிக்க பகுதியில் ஊர்வலம் நடத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், அந்த ஏழு பேரையும் கொடூரமாக தாக்கியுள்ளதும் அந்த காயங்களை மறைக்கவே அவர்களின் உடலில் வண்ணம் பூசப்பட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

குறித்த விவகாரம் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள அதிகாரிகள், குறித்த சம்பவத்திற்கு பின்னால் அந்த போதை மருந்து கும்பலுக்கு என்ன நோக்கம் என்பது இதுவரை வெளியாகவில்லை என தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி, இந்த சம்பவம் தொடர்பில் இதுவரை எந்த கைது நடவடிக்கையும் நடபெறவில்லை என கூறப்படுகிறது.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்