வெளிநாட்டில் கணவரை விவாகரத்து செய்யும் இளம் பெண்... அவர் சொன்ன அதிரவைத்த காரணம்

Report Print Santhan in ஏனைய நாடுகள்

ஐக்கிய அரபு அமீரகத்தில் கணவர் பப்ஜி விளையாட அனுமதிக்காத காரணத்தினால், மனைவி விவாகரத்து கோரியுள்ள சம்பவம் பலரையும் அதிரவைத்துள்ளது.

தற்போது உலகம் முழுவதிலும் இருக்கும் இளைஞர்கள் மற்றும் இளம் பெண்கள் பெரும்பாலானோர் பப்ஜி விளையாட்டிற்கு அடிமையாகியுள்ளனர்.

இந்த விளையாட்டினால் உயிர்சேதங்களும் ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் ஒரு சில மாநிலங்களில் பப்ஜி விளையாட்டிற்கு தடை செய்ய கோரியும் கோரிக்கை எழுந்து வருகிறது.

இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் அஜ்மான் நகரின் காவல்துறையில் 20 வயதைக் கடந்த பெண் ஒரு புகார் அளித்துள்ள புகார் பலரையும் அதிரவைத்துள்ளது.

அந்த புகாரில், தனது கணவர், நான் பப்ஜி விளையாட்டை விளையாடுவதற்கு அனுமதி மறுக்கிறார். அதனால், தனது கணவரிடமிருந்து விவாகரத்து வேண்டும். எனக்கான பொழுதுபோக்கை தீர்மானிப்பதற்கு எனக்கு உரிமை உள்ளது.

நான், அளவுடன்தான் பப்ஜி விளையாட்டு விளையாடுகிறேன். எனக்கு, போனில் சேட் செய்வது பிடிக்காது. என்னுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் நான் இந்த விளையாட்டை விளையாடுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுகுறித்து பொலிசார் ஒருவர் கூறுகையில், அந்தப் பெண் விளையாட்டில் அடிமையாகிவிடக் கூடாது என்று எண்ணி அவரின் கணவன் தொடர்ச்சியாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அதுதான் இவர்களுக்கிடையேயான பிரச்சனைக்கு காரணம் என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த செய்தியை அறிந்த இணையவாசிகள் பலரும் ஒரு பப்ஜி விளையாட்டிற்காக விவாகரத்து என்பது எல்லாம் மிகவும் ஓவர் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்